Watch : கோவையில் பஞ்சு மெத்தை குடோனில் பயங்கர தீவிபத்து! சட்டென தீயில் கருகிய பஞ்சு!

கோவையில் தலையணை மெத்தை குடோன் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின.
 

First Published Apr 4, 2023, 10:45 AM IST | Last Updated Apr 4, 2023, 10:45 AM IST

கோவை உக்கடம் அல் அமீன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது ஹசன். இவர் கோவை புதூர் அடுத்த அறிவொளி நகர் பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தலையணை, மெத்தை மற்றும் சோபா ஆகியவை விற்பனை செய்து வருகிறார். அதே பகுதியில் குடோன் அமைத்து தொழில் செய்து வந்த நிலையில் இன்று காலை சுமார் 6 மணி அளவில் அந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து தொடர்பாக மதுக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விபத்திற்கு மின் கசிவே காரணம் எனவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Video Top Stories