Watch : சக்கர பலகையில் வந்த மாற்றுத்திறனாளி! உடனடியாக மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய ஆட்சியர்!

கோவை அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டர் கேட்டு வந்த பெண்ணுக்கு, உடனடி ஏற்பாடக மூன்று சக்கர சைக்கை வழங்கி மாவட்ட ஆட்சியர் உதவினார்.
 

First Published Mar 28, 2023, 12:10 PM IST | Last Updated Mar 28, 2023, 12:10 PM IST

கோவை புளியகுளம் அம்மன் குலத்தை சேர்ந்தவர் ஜோதி. இவர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்ட ஜோதி சக்கரப் பலகையில் அமர்ந்த படியே வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு சக்கர பலகையில் வந்து ஸ்கூட்டர் வழங்கி உதவிடுமாறு மனு அளித்தார். அந்த மனு உடனடியாக மாற்று திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மேலும் ஸ்கூட்டரை விரைவில் வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மூன்று சக்கர சைக்கிளை பெற்று சென்ற ஜோதி எனக்கு வழங்கியது போல் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும் என்றும் இதற்காக தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார்.

Video Top Stories