Watch : குறுக்கே சென்ற நாயால் மரத்தில் மோதிய கார்! தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

சூலூர் அருகே நாய் குறுக்கே சென்றதால் மரத்தில் மோதி கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

First Published May 25, 2023, 11:02 AM IST | Last Updated May 25, 2023, 11:02 AM IST

கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில் இருந்து சூலூர் நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் முத்து கவுண்டன்புதூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பயணித்துள்ளார். அவரது ஓட்டுநர் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நாய் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் இடது புறமாக காரை திருப்பி உள்ளார்‌. இதில் கார் நிலைத்தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது.

இதனால் காரின் இன்ஜின் பகுதியில் தீ பற்றியது. சுதாரித்துக் கொண்ட ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் காரில் இருந்து உடனடியாக வெளியேறினர். இது குறித்து சூலூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு ரமேஷ் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது, தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய் குறுக்கே சென்றதால் கார் புளிய மரத்தின் மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Video Top Stories