Asianet News TamilAsianet News Tamil

கோவைய பலூனில் பார்க்க அரிய வாய்ப்பு; சர்வதேச பலூன் திருவிழாவில் குவியும் பார்வையாளர்கள்

கோவையில் நடைபெறும் 9வது சர்வதேச பலூன் திருவிழாவை பார்க்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குவிந்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. இன்று முதல் இந்த திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக இந்த பலூன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும்  பலூன்திருவிழா எனவும் இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லேண்ட் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பிலும் ஒரு பலூன் பறக்க விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை பார்ப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கலந்து கொண்டு மூன்று நாட்களும் காலை மாலை என இரு வேலைகளிலும் பலூன்கள் வானில் பறக்க விடப்படுகிறது. இந்த பலூனில் பறப்பதற்காக ஒரு நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு ரூபாய் ஆயிரம் கட்டணம் வசூல் செய்து அவர்கள் விரும்பும் பலூன்களில் இருக்கும் இடத்திலிருந்து வானில் உயரமாக பலூன்கள் பறக்க விடப்படுகிறது, 

இந்த பலூன் திருவிழா முன்னிட்டு உணவுத் திருவிழா மற்றும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். அதிகாலை வானில் பறந்த பலூன்கள் அணிவகுத்து செல்வது பார்ப்பதற்கு கண் கவரும் விதமாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Video Top Stories