கலைஞரை தனது அண்ணனாக பாவித்து கருணாநிதிக்கு இசை அஞ்சலி செலுத்திய துப்பரவு தெழிலாளி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு பாடல் பாடி இசை அஞ்சலி செலுத்தினார்.

Share this Video

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கருணாநிதியின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது. 

அப்போது அங்கு வந்த துப்பரவு தொழிலாளியான காளியம்மாள் (வயது 85) கருணாநிதியின் புகைப்படம் முன்பாக பாசமலர் படத்தில் இடம் பெற்றிருந்த “மலர்ந்தும் மலராத” பாடலை பாடி அஞ்சலி செலுத்தினார்.

Related Video