என்னப்பா ஏதோ 10 கிலோவ இழுத்துட்டு போற மாதிரி போற? 900 கிலோ காரை அசால்ட்டாக இழுத்து சிறுவன் சாதனை

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அறிவுத்திருக்கோவில் அருகே பொள்ளாச்சி, வால்பாறை சாலையில் 900 கிலோ எடை கொண்ட நான்கு சக்கர வாகனத்தை 2.47 நிமிடத்தில் இழுத்து  ஏழு வயது சிறுவன் சாதனை.

Share this Video

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரௌத்திரம் தற்காப்பு கலைகள் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவன் தேவசுகன் (வயது 7). இன்று காலை 10.30 மணி அளவில் தேவசுகன் 900 கிலோ எடை கொண்ட நான்கு சக்கர வாகனத்தை 2.47 நிமிடத்தில் 220 மீட்டர் தூரம் இழுத்து சாதனை புரிந்துள்ளார். இவரது சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இவரது சாதனையை பாராட்டி இவருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஏழு வயது சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்து தேவசுகனை பாராட்டி வருகின்றனர்.

Related Video