கண்களைக் கட்டிக் கொண்டு ஒரு நிமிடத்தில் 146 முறை சிலம்பம் சுழற்றி சிறுமி உலக சாதனை

கோவையில் சிலம்ப கலையை மீட்டெடுக்கும் விதமாக கண்களை கட்டிக்கொண்டு 6 வயது சிறுமி ஒரு நிமிடத்தில் 146 முறை சிலம்பம் சுழற்றி சாதனையை நிகழ்த்தி  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Share this Video

கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல்ராஜ், இசைவாணி தம்பதியரின் ஆறு வயது மகள் அகல்யா. இவர் சிறு வயதிலிருந்து சிலம்பம் கலையில் ஆர்வம் கொண்டு பல்வேறு சாதனைகளை செய்து அசத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக அழிந்து வரும் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை மீட்டெடுத்து அனைவரிடமும் கொண்டு செல்லும் முயற்சியாக சிறுமி அகல்யா கண்களை கட்டிக்கொண்டு 1 நிமிடத்தில் 146 முறை சிலம்பத்தை சுழற்றி உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கண்களை கட்டிக்கொண்டு சாதனை நிகழ்த்திய சிறுமி துபாய் ஐன்ஸ்டின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே 1 நிமிடத்தில் 57 முறை சிலம்பம் சுழற்றியதை சிறுமி அகல்யா முறியடித்துள்ளதை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Related Video