கோடநாடு விவகாரம்; உடலில் கறுப்பு பெயிண்ட் அடித்து வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களால் பரபரப்பு

கோவையில் ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு அனுமதி பெறாமல் உடலில் கருப்பு மை பூசி பேரணியாக வர முயன்ற இளைஞர்கள் நான்கு பேர் கைது.

Share this Video

கோடநாடு கொள்ளை, கொலை தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். 

இந்த நிலையில் போராட்டத்திற்கு வந்த இளைஞர்கள் நான்கு பேர் உடல் முழுவதும் கருப்பு மை பூசி அதில் "கொடநாடு உண்மை குற்றவாளியை கைது செய்", "நிழல் குற்றவாளி வேண்டாம்", "நிஜ குற்றவாளியை கண்டுபிடி" வசனங்களை உடலில் எழுதி பேரணியாக நடந்து வர முயன்றனர். 

ஆனால் இது போன்ற ஏற்பாடுகளுக்கு காவல்துறை தரப்பில் அனுமதி கேட்கப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து அந்த இளைஞர்கள் நான்கு பேரும் பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Related Video