கவனக்குறைவாக வாகனத்தை திருப்பிய நபரால் சாலையில் தூக்கி வீசப்பட்ட 2 பெண்கள்

கோவையில் கவனக் குறைவாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்காமல் இருசக்கர வாகனத்தை திருப்பிய நபரும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்களும்  மோதி காயமடைந்தனர். அதன் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. 

Share this Video

கோவை மாவட்டம் ஆவாராம்பாளைம் பகுதியில் ஒரு நபர் சாலை ஓரம் நிறுத்தி வைத்து இருந்த அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு திருப்ப முற்பட்டு உள்ளார். அப்போது அவர் பக்கவாட்டு கண்ணாடியை பார்க்காமலும் பின்னால் ஏதேனும் வாகனங்கள் வருகிறதா என பார்க்காமலும் கவன குறைவுடன் வாகனத்தை திருப்பி உள்ளார். 

அப்போது அவ்வழியாக மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதினர். இதில் இரண்டு வாகனங்களில் இருந்தவர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மூவரையும் எழுப்பி முதலுதவி செய்து அனுப்பி வைத்தனர். 

இதில் மூன்று பேருக்கும் காயங்கள் ஏற்பட்டு உள்ளது. தற்போது அதன் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளன. 

Related Video