சத்தியராஜின் உறவினர் பங்களாவில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள பங்களாவில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க வந்த 2 மாத குட்டி யானை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தது.

First Published Apr 11, 2023, 5:52 PM IST | Last Updated Apr 11, 2023, 5:52 PM IST

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே கோவனூர் பகுதியில் நடிகர் சத்தியராஜின் தங்கை அபராஜிதா பங்களாவுக்கு சொந்தமான பங்களா ஒன்று உள்ளது. அந்த பங்களாவில் அமைக்கப்பட்டுள்ள கீழ்நிலை தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக 2 மாத குட்டி யானை ஒன்று வந்துள்ளது.

தொட்டியில் தண்ணீரின் அளவு குறைந்ததைத் தொடர்ந்து அதனை எட்டி குடிக்க முற்பட்ட குட்டி யானை பரிதாபமாக தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தது. குட்டி யானையை வெளியில் எடுக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் குட்டி யானை உள்ளே விழுந்து இறந்தது தெரியாமல் மேலும் 2 காட்டு யானைகள் அங்கு தண்ணீர் குடிக்க வந்த நிலையில், அதனை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Video Top Stories