துணை கேப்டன் பதவி போச்சு, போட்டியிலிருந்து தூக்காம பாத்துக்கோ: மனைவியுடன் கோயிலில் வேண்டிய கேஎல் ராகுல்!

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் உள்ள மகாகாலேஸ்வரர் ஜோதிர்லிங்க கோயிலில் கேஎல் ராகுல் தனது மனைவி அதியா ஷெட்டியுடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

First Published Feb 27, 2023, 12:07 PM IST | Last Updated Feb 27, 2023, 12:07 PM IST

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் 20, 17, 1 என்று ரன்கள் எடுத்துள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் நிலைத்து நின்று ஆடாமல் சொதப்பி வரும் நிலையில், வரும் 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இனிமேல் ரன் மேல் ரன் அடிச்சுக்கிட்டே இருக்கணும்: உஜ்ஜையின் கோயிலில் கேஎல் ராகுல் சாமி தரிசனம்!

வரும் மார்ச் 1 ஆம் தேதி நடக்கும் 3ஆவது டெஸ்ட் போட்டி மற்றும் 9ஆம் தேதி தொடங்கும் 4ஆவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடாவிட்டால், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, 2ஆவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

தம்மாதுண்டு இருந்துகிட்டு இந்த ஆட்டம் போட்டா, சிறுவனுக்கு போட்டியாக டான்ஸ் ஆடிய ஷர்துல் தாக்கூர்!

மேலும், எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்த நிலையில், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்க கூடாது என்று கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இன்னும் சிலர் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியில் கேஎல் ராகுல் இடம் பெற்றுள்ளார்.

டிஎன்பிஎல் போட்டி எப்போது? முதல் போட்டி யார் யாருக்கு?

இந்த நிலையில், கேஎல் ராகுல் தனது மனைவி அதியா ஷெட்டியுடன் மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் உள்ள மகாகாலேஸ்வரர் ஜோதிர்லிங்க கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அர்ச்சகர்களுக்கு மட்டுமே லிங்கத்தை தொட வேண்டும் என்று இருக்கும் போது கேஎல் ராகுல் மற்றும் அவரது மனைவி இருவரும் ஜோதிர்லிங்கத்தை தொட்டு வணங்கியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories