மீண்டும் அதிர்ச்சி.!! நீட் தேர்வுக்கு பயந்து புதுச்சேரி மாணவர் தற்கொலை

நீட் தேர்வுக்கு பயந்து புதுச்சேரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First Published May 7, 2023, 5:05 PM IST | Last Updated May 7, 2023, 5:05 PM IST

புதுச்சேரி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் இவரது மனைவி பரிமளம் இவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிசியோதெரபியாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் 18 வயதான ஹேமசந்திரன் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் எடுத்திருந்த நிலையில் மீண்டும் இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக கோச்சிங் சென்டரிலும் ஹேமச்சந்திரன் பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மதியம் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஒரு வித பயத்தோடும் விரக்தியுடன் ராமச்சந்திரன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில்  தனியாக இருந்த ஹேமசந்திரன் நீட் தேர்வு பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பரிமளம் என்ன செய்வது என்று தெரியாமல் உருளையன்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

பிறகு தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய ஹேமசந்திரன் குறைந்த மதிப்பெண் பெற்றார். இதனால் இந்த ஆண்டு தேர்வு எழுத தயாராகி வந்ததும் தேர்வில் தோல்வி அடைந்து விடுவமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று நடைபெற இருந்த நீட் தேர்வை எழுத தயாரான மாணவன் ஹேமச்சந்திரன் திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..இனிமே இப்படித்தான்! அதிகாரிகள் மாற்றம்! அமைச்சர்கள் மாற்றம்? அதிரடியில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின் - ஏன்?