இனிமே இப்படித்தான்! அதிகாரிகள் மாற்றம்! அமைச்சர்கள் மாற்றம்? அதிரடியில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின் - ஏன்?
இரண்டு வருட ஆட்சியை திமுக அரசு நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இரண்டு வருடங்களை நிறைவு செய்துள்ளது. இந்த 2 வருட ஆட்சியில் பல்வேறு சாதனைகளையும், அதே நேரத்தில் சில சர்ச்சைகளையும் சுமந்துள்ளது திமுக அரசு. தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, "திருப்பூர் மாவட்ட அதிகாரி திருவளர் செல்வி, ஈரோடு மாவட்ட அதிகாரி ஐய்யனார், விருதுநகர் ஞானகவுரி, கோயமுத்தூர் பூபதி, பெரம்பலூர் அறிவழகன், திருச்சி பாலமுரளி, தஞ்சாவூர் சிவக்குமார் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க..காப்பி சர்ச்சையில் சிக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ பாடல்! என்னடா இது ஏ.ஆர் ரஹ்மானுக்கு வந்த சோதனை
பிறகு இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட அதிகாரி புகழேந்தி, சேலம் முருகன், புதுக்கோட்டை மணிவண்ணன், தென்காசி கபீர், கள்ளக்குறிச்சி சரஸ்வதி, திருவள்ளூர் ராமன், சென்னை ஆறுமுகம், தஞ்சாவூர் முத்தையா உள்ளிட்டோர் இட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், சென்னை தலைமையிடத்தில் துணை இயக்குநர்களாக பணியாற்றும் பாலதண்டாயுதபாணி, மஞ்சுளா, சுமதி, குழந்தை ராஜன் திருநாவுக்கரசு உள்ளிட்டோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றத்திற்கான உத்தரவை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஓய்வுபெற்ற நிலையில், புதியஇயக்குநராக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை செயலர் க. பணீந்திரரெட்டி வெளியிட்ட அறிவிப்பில், தமிழக காவல் துறையின் சிபிசிஐடி பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த அபய் குமார்சிங், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக (கூடுதல் டிஜிபி) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க..ரூ.20000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ
தலைமையக கூடுதல் டிஜிபியாக இருந்து கூடுதலாக நிர்வாகப் பிரிவையும் கவனித்து வந்த ஜி. வெங்கட்ராமன் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார். செயலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி பி. பாலநாக தேவி, நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, தலைமையக பணியும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை பிரிவு கூடுதல் டிஜிபி எச். எம். ஜெயராமுக்கு செயலாக்கப்பிரிவு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பணீந்திர ரெட்டி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு நிறைவை ஒட்டியும், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தும் அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கடந்த சில மாதங்களாக பேச்சு அடிபட்டது. சரியாக திமுக அரசு பொறுப்பேற்று 3ம் ஆண்டை அடியெடுத்து வைக்கும் நிலையில் மீண்டும் அமைச்சர்கள் மாற்றம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
குறிப்பாக நிதி அமைச்சர் பிடிஆர் ஆடியோ சர்ச்சை, ஜிஸ்கொயர் சோதனை என அடுத்தடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைச்சர்கள் மாற்றப்பட வாய்ப்பு உண்டு என்று தமிழக கோட்டை வட்டாரங்கள் கிசுகிசுக்கிறது. அரசு அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் மாற்றம் எப்போது ? என்பதே கேள்வியாக இருக்கிறது.
இதையும் படிங்க..2 முறை கர்ப்பம்.. பேஸ்புக் காதல்! 23 வயது பெண்ணை சகோதரர் உடன் சீரழித்த போலீஸ்! அதிர்ச்சி சம்பவம்