MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • அடித்து ஆடும் விஜய்..! பெண்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம்..! ஸ்கோர் செய்த தளபதி

அடித்து ஆடும் விஜய்..! பெண்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம்..! ஸ்கோர் செய்த தளபதி

அண்ணன் சீர் வழங்கப்படும் என அறிவித்துள்ள தவெக தலைவர் விஜய், ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 35 ஆயிரம் கிடைக்கும். பின்னர் வேறு சலுகைகளுகம் காத்திருக்காம்.!

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 08 2026, 09:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விஜய் சொன்னது கெத்தான அறிவிப்புகளா?
Image Credit : X

விஜய் சொன்னது கெத்தான அறிவிப்புகளா?

தமிழக அரசியல் களம் இப்போது 70எம்எம் திரையை விட அதிக விறுவிறுப்பாக மாறியுள்ளது. சினிமாவில் 'வசூல் மன்னனாக' பாக்ஸ் ஆபீஸில் சிக்சர் அடித்து வந்த தளபதி விஜய், இப்போது அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் மூலமாக வாக்குறுதிகளில் சிக்சர் அடிக்கத் தொடங்கிவிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் சரிபாதி பலமான பெண் வாக்காளர்களைக் குறிவைத்து அவர் வீசியுள்ள 'மாஸ்டர் பிளான்' மற்ற கட்சிகளைத் தலைசுற்ற வைத்துள்ளது.

25
மாதந்தோறும் மங்களம்: பெண்களின் கையில் ரூ.2,500!
Image Credit : Asianet News

மாதந்தோறும் மங்களம்: பெண்களின் கையில் ரூ.2,500!

சினிமாவில் ஒரு சண்டைக் காட்சியில் பத்து பேரை ஒற்றை ஆளாக வீழ்த்துவது போல, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இல்லத்தரசிகளுக்குப் பெரும் ஊக்கமளிக்கும் அறிவிப்பை விஜய் வெளியிட்டுள்ளார்.

மாதாந்திர உரிமைத் தொகை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500 வழங்கப்படும்.

ஆண்டு வருமானம்: இதன் மூலம் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு நேரடியாக ₹30,000 ரொக்கமாகச் சென்றடையும்.

தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களை விட இது கூடுதல் தொகை என்பதால், இல்லத்தரசிகளின் கவனம் தளபதியின் பக்கம் திரும்பியுள்ளது.

Related Articles

Related image1
Tvk Vijay: விஜயின் மாஸ்டர் பிளான்.! நோட்டுக்கு செக் வைத்த தளபதி.! 10 லட்சம் மாணவர்களுடன் களமிறங்கும் தவெக!
Related image2
Vijay Sangeetha: அதிரடி ட்விஸ்ட்.! சமரசத்தில் முடிந்த விஜய் – சங்கீதா விவகாரம்?! குழந்தைகளுக்காக குப்பையில் தூக்கி வீசப்பட்ட "ஈகோ"
35
சமையல் எரிவாயுவில் அதிரடி 'டிஸ்கவுண்ட்'!
Image Credit : Asianet News

சமையல் எரிவாயுவில் அதிரடி 'டிஸ்கவுண்ட்'!

விலைவாசி உயர்வால் அடுப்பங்கரை பட்ஜெட் ஓட்டை விழுந்து கிடக்கும் நிலையில், சிலிண்டர் விலையில் விஜய் காட்டியுள்ள அதிரடி இதோ:

சிலிண்டர் விலை: சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் என்றும் அதாவது ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக கொடுக்கப்படும் எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.  

ஆண்டு மானியம்: 6 சிலிண்டர்களுக்குச் சேர்த்து ஆண்டுக்கு ரூ.5,500 வரை மானியம் வழங்கத் திட்டம்.

45
மொத்தக் கணக்கு: ஆண்டுக்கு ரூ.35,000 ஸ்கோர்!
Image Credit : Asianet News

மொத்தக் கணக்கு: ஆண்டுக்கு ரூ.35,000 ஸ்கோர்!

மாதாந்திர உதவித்தொகை ₹30,000 மற்றும் சிலிண்டர் மானியம் ₹5,500 என அனைத்தையும் சேர்த்தால், ஒரு சாதாரணக் குடும்பப் பெண்ணுக்கு ஆண்டுக்குச் சுமார் ரூ.35,000-க்கும் மேல் பலன் கிடைக்கும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. "பாக்ஸ் ஆபீஸ் வசூலை விட, மக்களின் வாழ்வாதார வசூல் முக்கியம்" என்பதைப் போல விஜய் எடுத்துள்ள இந்தத் திட்டம், அரசியலில் ஒரு 'மெகா ஹிட்' அடித்திருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

55
சினிமா டு அரசியல்: கிளைமாக்ஸ் நெருங்குகிறதா?
Image Credit : Asianet News

சினிமா டு அரசியல்: கிளைமாக்ஸ் நெருங்குகிறதா?

சினிமாவில் மாஸ் காட்டிய விஜய், இப்போது தேர்தல் அறிக்கையின் மூலம் நிஜ அரசியலிலும் மாஸ் காட்டி வருகிறார். "சொன்னதைச் செய்வார் தளபதி" என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்க இந்த ரூ.35,000 திட்டம் ஒரு பெரிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த 'வாக்குறுதி வேட்டை' தளபதிக்கு எந்த மாதிரியான வெற்றியைத் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
விஜய் (நடிகர்)
டிவி.கே. விஜய்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!
Recommended image2
பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!
Recommended image3
சமூகநீதியா..? சவப்பெட்டியா..? ஸ்டாலினை அதிரவைக்கும் நாடார் சங்க போஸ்டர்..!
Related Stories
Recommended image1
Tvk Vijay: விஜயின் மாஸ்டர் பிளான்.! நோட்டுக்கு செக் வைத்த தளபதி.! 10 லட்சம் மாணவர்களுடன் களமிறங்கும் தவெக!
Recommended image2
Vijay Sangeetha: அதிரடி ட்விஸ்ட்.! சமரசத்தில் முடிந்த விஜய் – சங்கீதா விவகாரம்?! குழந்தைகளுக்காக குப்பையில் தூக்கி வீசப்பட்ட "ஈகோ"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved