புதுச்சேரியின் பேமஸ் பைக் திருடனை அலேக்காக தூக்கிய போலீஸ் - வைரல் CCTV வீடியோ !!

புதுச்சேரியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பலே பைக் திருடன் ரகுவை இரவு ரோந்து பணியின் போது போலீசார் திருட்டு வண்டியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share this Video

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் பகுதியில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நோனாங்குப்பம் பகுதியில் நடந்த திருட்டு தொடர்பாக, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை திருடி செல்வது வில்லியனூர் கீழ் அக்ரஹாரத்தை சேர்ந்த பலே திருடன் ரகு என்பதும், அவன் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து அவனை போலீசார் தேடி வந்த நிலையில், அரியாங்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் குற்றப்பிரிவு காவலர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரியாங்குப்பம் பகுதியில் போக்கில் சென்ற ரகுவை பிடித்து கைது செய்து்விசாரணை நடத்தினர். அதில் அவன் வைத்திருந்த வண்டியும் திருட்டு வண்டி என்பது தெரியவந்தது. மேலும் அவனிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் ரகு மீது வழக்கு பதிந்து கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க..ட்விட்டரில் எலான் மஸ்கிற்கு உதவி செய்யும் சென்னை இளைஞர்.. யார் இந்த ஸ்ரீராம்.?

இதையும் படிங்க..தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் அடிச்சு ஊத்த போகுது கனமழை.. மக்களே உஷார் !!

Related Video