Asianet News TamilAsianet News Tamil

ட்விட்டரில் எலான் மஸ்கிற்கு உதவி செய்யும் சென்னை இளைஞர்.. யார் இந்த ஸ்ரீராம்.?

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்கிற்கு உதவியாக நம்ம ஊர் சென்னையை சேர்ந்த ஒருவர் உதவிவருகிறார் என்பது தெரியுமா உங்களுக்கு ? அதை பற்றி பார்க்கலாம்.

Who is Sriram Krishnan the man helping Elon Musk with Twitter rejig
Author
First Published Oct 31, 2022, 8:22 PM IST

டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் வலைத்தளத்தை சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்.கடந்த வாரம், ட்விட்டர் நிர்வாகத்தை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த எலான் மஸ்க், அதில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

Who is Sriram Krishnan the man helping Elon Musk with Twitter rejig

அந்த மாற்றங்கள் அனைத்தும் ட்விட்டர் ஊழியர்களுக்கும், பயனாளர்களுக்கும் களேபரத்தை உண்டாக்குகிறது. எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கிய கையோடு ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த நடவடிக்கை முதலில், தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் மீது பாய்ந்தது.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

எலான் மஸ்க், பணி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலை தயார் செய்ய கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது ட்விட்டரில் 7,500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் எலான் மஸ்குக்கு உதவி வருகிறார். யார் இவர் என்று பார்த்தால் சென்னையில் பிறந்துள்ளார் ஸ்ரீராம்.

Who is Sriram Krishnan the man helping Elon Musk with Twitter rejig

தற்போது இவர் ஆண்ட்ரசன் ஹாரோவிட்ஸ் நிறுவனத்தில் பொது பங்குதாரராக இப்போது உள்ளார். கிரிப்டோ மற்றும் வெப் ஸ்டார்ட்அப் முதலீடு சார்ந்து இந்நிறுவனம் இயங்கி வருகிறது. மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், ஸ்னாப் சாட், ட்விட்டர் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்வேறு விதமான முக்கிய பொறுப்புகளையும், பணிகளையும் கவனித்துள்ளார். தற்போது எலான் மஸ்கிற்கு உதவிக்கொண்டே a16z நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார்.

தற்போது சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ட்விட்டர் நிறுவனத்தில் தற்காலிகமாக எலான் மஸ்கிற்கு உதவி வருகிறேன். என்னோடு இணைந்து வேறு சிலரும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது மிகவும் முக்கியமான நிறுவனம். உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதும் கூட. மஸ்க், அதை சாத்தியம் செய்வார் என்றும் நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க..அதிகரிக்கும் கொரோனா.. லாக்டவுனுக்கு பயந்து ஓடும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வைரல் வீடியோ!

இதையும் படிங்க..குஜராத் மோர்பி பாலம் - 19ம் நூற்றாண்டின் வாகிஜி தாகூரால் கட்டப்பட்ட அதிசய பாலத்தின் வரலாறு தெரியுமா ?

Follow Us:
Download App:
  • android
  • ios