அதிகரிக்கும் கொரோனா.. லாக்டவுனுக்கு பயந்து ஓடும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வைரல் வீடியோ!
கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் சீனாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தப்பித்து ஓடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக புதுமுடக்கம், தடுப்பூசி என பல்வேறு ஆயுதங்களை எடுத்து கொரோனவை தடுத்தது உலக நாடுகள். கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்ட, நகர நிர்வாகங்கள் தீவிர கொரோன தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
அங்குள்ள ஐ-போன் தொழிற்சாலையில் உள்ள பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு பணியாற்றும் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவார்கள். செங்க்சோவ் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஐ-போன் தொழிற்சாலையில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
லாக்டவுனுக்கு பயந்த ஊழியர்கள், தொழிற்சாலை வேலியை தாண்டி குதித்து சொந்த ஊர்களுக்கு தப்பிச்சென்ற வீடியோ அங்குள்ள சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சீனாவில் உள்ள பிபிசி நிறுவனத்தை சேர்ந்த ஸ்டீபன் மெக்டொனெல் இந்த காணொளியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
சென்ஷோ ஃபாக்ஸ்கானில் சுமார் 300,000 தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். உலகின் பாதி ஐபோன்கள் இங்குதான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் வயல்வெளிகளிலும் சாலைகளிலும் மலைகளை ஏறி வீடு திரும்புகிறார்கள் என்று சீனாவை சேர்ந்த ஊடகங்கள் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.
ஹெனான் மாகாணத்தின் தலைநகரான சென்ஷோவில் அக்டோபர் 29 வரையிலான ஏழு நாட்களில் உள்ளூர் பரவல் காரணமாக 167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பொதுமுடக்கத்தின் போது, இதேபோல மக்கள் மாநிலம் விட்டு மாநிலம் பொடிநடையாக நடந்தே சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக.. காங்கிரஸ் & ஆம் ஆத்மி நிலை ? ஏசியாநெட் நியூஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் !
இதையும் படிங்க..நவம்பர் 6ம் தேதி.! ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி - தமிழக காவல்துறை உத்தரவு