MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • தலை துண்டிக்கப்படும் ஈரான்... கமெனி- லாரிஜானி மரணத்தால் புதை குழியில் சிக்கிய அமெரிக்கா..!

தலை துண்டிக்கப்படும் ஈரான்... கமெனி- லாரிஜானி மரணத்தால் புதை குழியில் சிக்கிய அமெரிக்கா..!

எந்தவொரு நாட்டிலும் வெளிநாட்டுத் தாக்குதல்கள் நடக்கும்போது, உள்நாட்டு அரசியல் வேறுபாடுகள் மறைந்து தேசியவாதம் மேலோங்கும். ஈரானில் நிலவிய உள்நாட்டுப் போராட்டங்கள், கமெனி மற்றும் லாரிஜானி படுகொலைக்குப் பிறகு முற்றிலுமாக அடங்கிவிட்டன.

2 Min read
Author : Thiraviya raj
Published : Mar 18 2026, 04:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஈரானின் 'வாரிசு' சூத்திரம்: சிதறாத அதிகாரம்
Image Credit : x

ஈரானின் 'வாரிசு' சூத்திரம்: சிதறாத அதிகாரம்

ஈரானின் அரசியல் மற்றும் ராணுவக் கட்டமைப்பை நிலைகுலையச் செய்யும் நோக்கில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் 'தலைகளைத் துண்டிக்கும்' உத்தி, உண்மையில் ஒரு வெற்றியா அல்லது இஸ்ரேல் தனக்குத்தானே தோண்டிக்கொள்ளும் படுகுழியா? அலி லாரிஜானியின் படுகொலைக்குப் பிந்தைய சூழலை வைத்துப் பார்க்கையில், இது ஈரானுக்குப் பேரிடியாகத் தெரிந்தாலும், நீண்ட கால அடிப்படையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பெரும் பின்னடைவையே தரும் எனத் தெரிகிறது.

ஈரான் ஒரு தனிநபரால் இயங்கும் நாடு அல்ல; அது ஒரு வலுவான மத மற்றும் ராணுவக் கட்டமைப்பைக் கொண்ட நாடு. உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி உயிருடன் இருந்தபோதே, தனக்குப் பின் யார் வர வேண்டும் என்பதற்கான நான்கு அடுக்கு வாரிசுத் திட்டத்தை உறுதி செய்திருந்தார். நியூயார்க் டைம்ஸ் குறிப்பிடுவது போல, லாரிஜானி போன்ற ஆளுமைகள் கொல்லப்படுவது ஒரு வெற்றிடத்தை உருவாக்காது. மாறாக, முன்னரே திட்டமிடப்பட்ட வாரிசுகள் அந்த இடத்தைப் பிடிப்பார்கள். இது ஈரான் அரசு கவிழ்வதைத் தடுத்து, போரை மேலும் நீட்டிக்க வழிவகுக்கும். ஈரான் விரும்புவதும் இதையே - எதிரியை நீண்ட காலப் போரில் மூழ்கடித்துச் சோர்வடையச் செய்வது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அறியப்படாத எதிரிகள்: உளவுத்துறையின் சவால்
Image Credit : Asianet News

அறியப்படாத எதிரிகள்: உளவுத்துறையின் சவால்

கொல்லப்பட்ட லாரிஜானி, கமெனி அல்லது முகமது பக்பூர் ஆகியோரைப் பற்றி இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஓரளவாவது உளவுத் தகவல்கள் தெரிந்திருந்தன. அவர்களின் பலம், பலவீனம் மற்றும் சிந்தனை முறை கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த இடங்களுக்கு வரும் புதிய தலைவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது குறித்து மேற்கத்திய உளவுத்துறையிடம் மிகக் குறைந்த தகவல்களே உள்ளன. மேலும், புதிதாகப் பொறுப்பேற்கும் தலைவர்கள், தங்களுக்கு முன்னால் இருந்தவர்களை விடவும் தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். இது சமரசப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை நிரந்தரமாக மூடிவிடும்.

34
'தலை துண்டிப்பு' உத்தியின் வரம்புகள்
Image Credit : Getty

'தலை துண்டிப்பு' உத்தியின் வரம்புகள்

இஸ்ரேலிய ராணுவ உளவுத்துறையின் முன்னாள் தலைவர் டேனி சிட்ரினோவிச் எச்சரிப்பது போல, ஒரு நாட்டின் தலைமையை எத்தனை முறைதான் துண்டிக்க முடியும்? ஈரானியக் கட்டமைப்பில் ஒரு தலை மறைந்தால், மற்றொரு தலை முளைக்கும் 'ஹைட்ரா' போன்ற வலுவான பிணைப்பு உள்ளது. இந்தப் படுகொலைகள் ஈரானியர்களிடையே இஸ்ரேல் மீதான வெறுப்பைத் தீராத பகையாக மாற்றுகின்றன. இதன் விளைவாக, வரும் காலங்களில் ஈரான் நேரடியாகப் போரிடாமல், தனது 'நிழல் உலகப் படைகள்' மூலம் இஸ்ரேலிலும் அமெரிக்காவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும்.

44
உள்நாட்டு ஒற்றுமையும் சர்வதேச அனுதாபமும்
Image Credit : x

உள்நாட்டு ஒற்றுமையும் சர்வதேச அனுதாபமும்

எந்தவொரு நாட்டிலும் வெளிநாட்டுத் தாக்குதல்கள் நடக்கும்போது, உள்நாட்டு அரசியல் வேறுபாடுகள் மறைந்து தேசியவாதம் மேலோங்கும். ஈரானில் நிலவிய உள்நாட்டுப் போராட்டங்கள், கமெனி மற்றும் லாரிஜானி படுகொலைக்குப் பிறகு முற்றிலுமாக அடங்கிவிட்டன. டிரம்ப் மற்றும் நெதன்யாகு எவ்வளவோ முயன்றும், ஈரானிய மக்கள் வீதிக்கு வந்து ஆட்சி மாற்றத்தைக் கோரவில்லை. மாறாக, தங்கள் தலைவர்களை 'தியாகிகள்' எனப் போற்றி அரசுக்கு ஆதரவாகத் திரண்டுள்ளனர். அமெரிக்க ஊடகங்களே இந்தப் படுகொலைகளைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளன, இது ஈரானுக்கு உலக அரங்கில் ஒருவித அனுதாபத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

அலி லாரிஜானியின் படுகொலை இஸ்ரேலுக்கு ஒரு தற்காலிகமான 'திறன் நிரூபணமாக' இருக்கலாம். ஆனால், ஆழமான அரசியல் நோக்கில் பார்த்தால், இது ஈரானின் பிடியை இன்னும் இறுக்கமாக்கியுள்ளது. பழைய தலைவர்களின் மறைவு, புதிய மற்றும் இன்னும் ஆக்ரோஷமான ஈரானை உருவாக்கும் வித்தாக மாறியிருக்கிறது. இந்த 'வெற்றி' உண்மையில் இஸ்ரேலுக்கு ஒரு கேந்திரியத் தோல்வியாகவ முடியும்.

About the Author

TR
Thiraviya raj
உலகப் போர்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Recommended image2
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
Recommended image3
TN Govt Launches: மூட்டைக்கு காசு கேட்டால் முடிந்தது கதை.! வாட்ஸ்அப்பில் புகார் தட்ட உத்தரவிட்ட தமிழக அரசு!
Related Stories
Recommended image1
TVK Vijay: எந்த பேரத்துக்கும் அடிபணியாத தளபதி.! முதல்வர் பதவியை தூக்கியெறிந்த விஜய்! காரணம் இதுதான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved