நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
நவம்பர் 1ம் தேதி விடுமுறை என்று தமிழக அரசு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் திருவிழாக்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சரியான நிலையில் பல மாவட்டங்களில் பல்வேறு திருவிழாக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க..டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக வருகிற 12ஆம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும். தமிழகத்துடன் குமரி இணைந்த தினத்துக்கு உள்ளூர் விடுமுறை செலாவணிமுறி சட்டத்தின்படி அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க..கோவையில் முழு அடைப்பு! நாங்கள் சொல்லவே இல்லை!..நீதிமன்றத்தில் பல்டி அடித்த அண்ணாமலை
எனவே, நவம்பர் 1ஆம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..கோடநாடு எஸ்டேட் கொலை & கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பம்! சிபிசிஐடி போலீசார் எடுத்த அதிரடி முடிவு