கோடநாடு எஸ்டேட் கொலை & கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பம்! சிபிசிஐடி போலீசார் எடுத்த அதிரடி முடிவு

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட வருகின்றனர்.

First Published Oct 28, 2022, 4:40 PM IST | Last Updated Oct 28, 2022, 4:40 PM IST

நீலகிரி மாவட்டம் கோத்திரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு அண்மையில் மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்நிலையில் இவ்வழக்கு சம்மந்தமாக கடந்த ஒருவருட காலமாக தனிப்படை போலீசார் 316 பேரிடம் நடத்திய 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை ஆவண நகல்களை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த வந்த நீதிபதி முருகன் மற்றும் சிபிசிஐடி புலனாய்வு அதிகாரிகளிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.

இதன் அடிப்படையில் இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடி டிஜிபி ஷக்கில் அக்தர் தலைமையில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல், டிஎஸ்பி அண்ணாதுரை, சந்திரசேகர், வினோத் ஆகிய மூன்று டிஎஸ்பிக்கள் மற்றும் ஆய்வாளர் தனலட்சுமி  ஆகிய சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு  சம்பவம் நடைபெற்ற கோடநாடு எஸ்டேட் பங்களாவில் விசாரணையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியை ஆய்வு மேற்கொண்ட சி பி சி ஐ டி அதிகாரிகள் உள்ளே பணிபுரியும் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து மீண்டும் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஆய்வு மேற்கொண்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் கொடநாடு எஸ்டேட் பங்களாவின் கணினி பொறியாளராக பணியாற்றி தற்கொலை செய்து கொண்ட தினேஷின் வீட்டிற்கு சென்று சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் கோடநாடு கொலை, கொள்ளை நடைபெற்ற 2017 ம் ஆண்டு இரவு பணியில் இருந்த கிருஷ்ணதாபா, ஓம்பகதூர் இரவு காவல் பணியில் இருந்தபோது கொள்ளையர்கள், எஸ்டேட்டுக்குள் நுழைந்து ஓம்பகதூரை கொலை செய்யப்பட்ட நிலையில் கிருஷ்ணதாபா அப்பகுதியில் இருந்து தப்பிய நிலையில், தற்போது கிருஷ்ணதாபா தன் குடும்பத்துடன் நேபாளில் வசித்து வரும் நிலையில் இவ்வழக்கு குறித்து விசாரிக்க கிருஷ்ணதாபாவை அழைத்து வர விரைவில் நேபாள் செல்கின்றனர் சிபிசிஐடி போலீசார்.

இதையும் படிங்க..டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

இதையும் படிங்க..கோவையில் முழு அடைப்பு! நாங்கள் சொல்லவே இல்லை!..நீதிமன்றத்தில் பல்டி அடித்த அண்ணாமலை

Video Top Stories