நவம்பர் 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எனவே அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை காரணமாக பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இது தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வருகிற நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

இதையும் படிங்க..குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக.. காங்கிரஸ் & ஆம் ஆத்மி நிலை ? ஏசியாநெட் நியூஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் !

இதையும் படிங்க..கோஷ்டி பூசலில் தென்காசி திமுக.. அறிவாலயம் கொடுத்த அதிர்ச்சி தகவல் - கவலையில் உடன்பிறப்புகள்