கோஷ்டி பூசலில் தென்காசி திமுக.. அறிவாலயம் கொடுத்த அதிர்ச்சி தகவல் - கவலையில் உடன்பிறப்புகள்

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advocate Raja Tenkasi member of Sankarankovil assembly has selected DMK secretary for the tenkasi north district

தமிழகத்தில் உள்ள 71 திமுக கழக மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் இன்னும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை.

Advocate Raja Tenkasi member of Sankarankovil assembly has selected DMK secretary for the tenkasi north district

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லதுரை ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயத்தில் தர்ணா செய்ததும், மாவட்ட செயலாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. வாசுதேவநல்லூர், கடையநல்லூர் தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு திமுகவில் பலத்த போட்டி நிலவியது. 

இதையும் படிங்க..பிரதமர் மோடியின் ஆட்சி சூப்பர்..பாஜகவுக்கு தான் ஓட்டு.! ஏசியாநெட் நியூஸ் கருத்துக்கணிப்பில் தகவல்!

இந்த பதவி எம்.பியான தனுஷ்குமாருக்கு வழங்க உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை அறிவாலயத்தில் ஒரு கோஷ்டியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், சங்கரன் கோவில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள ராஜா, தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advocate Raja Tenkasi member of Sankarankovil assembly has selected DMK secretary for the tenkasi north district

ஏற்கனவே போட்டியில் இருந்த இருவரில் யாரை மாவட்டச் செயலாளர் ஆக்கினாலும் அவரை எதிர்த்து மற்றவர் கோஷ்டி அரசியல் நடத்துவார் என்பதால் தான் ராஜாவை பிடித்து மாவட்டச் செயலாளர் ஆக்கி இருக்கிறது அறிவாலயம் என்று கூறுகிறார்கள் உடன்பிறப்புகள். வேறு எதாவது பிரச்னை வருமா ? வராதா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இதையும் படிங்க..குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக.. காங்கிரஸ் & ஆம் ஆத்மி நிலை ? ஏசியாநெட் நியூஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios