குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக.. காங்கிரஸ் & ஆம் ஆத்மி நிலை ? ஏசியாநெட் நியூஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் !
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட ஏசியாநெட் கருத்துக்கணிப்பில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
குஜராத் சட்டமன்ற தேர்தல்:
1998ல் இருந்து தொடர்ந்து 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நீடித்து கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி மட்டும் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் ஆட்சி செய்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடி பிரதமராக சென்றுவிட்ட போதிலும் பாஜக தனது செல்வாக்கை தக்க வைத்து வருகிறது. இருப்பினும், கடைசியாக 2017 நடந்த சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு சிறிய இறக்கம் ஏற்பட்டது.
மும்முனை போட்டி:
மொத்தமுள்ள 182 தொகுதிகளில் மூன்று இலக்க வெற்றியில் இருந்து சரிந்து இரண்டு இலக்க எண்ணிக்கையிலான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு போட்டி கொடுக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி களமிறங்குகிறது. இதனால் வாக்கு வங்கி நிச்சயம் பிரியும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் பாஜக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
பாஜக Vs காங்கிரஸ்:
குஜராத் மாடலை முன்வைத்தே நாடாளுமன்ற தேர்தலை மோடி சந்தித்தார். குஜராத் தேர்தலில் தோல்வியுற்றால் அது தேசிய அளவில் எதிரொலிக்கும் என்பதால் பாஜக களத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 150 இடங்களை கைப்பற்ற பாஜக டார்கெட் நிர்ணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய குழுக்களை அமைத்து தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார். 3 கட்சிகளை சேர்ந்தவர்களும் தேர்தல் வாக்குறுதிகளையும், இலவச வாக்குறுதிகளை அள்ளி வீச தொடங்கிவிட்டார்கள். இதனால் மும்முனை போட்டி சூடுபிடித்துள்ளது.
ஆம் ஆத்மியின் பிளான்:
பஞ்சாப்பை வென்ற உற்சாகத்தோடு குஜராத்தில் வேலை செய்துவருகிறது ஆம் ஆத்மி கட்சி. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிக்கும் திட்டங்கள் குஜராத் களத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு டஃப் கொடுக்கிறது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..100 கடைகள் ஓகே! ராஜினாமா செய்யுங்க.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை விட்ட சவால் !
பின்னடைவில் காங்கிரஸ்:
குஜராத்தில் கடந்த தேர்தலில், 77 இடங்களைக் கைப்பற்றியது காங்கிரஸ். கிட்டத்தட்ட 16 தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டது. இந்த தேர்தலில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று நினைத்த காங்கிரஸ் கனவில் மண்ணை அள்ளி போட்டுள்ளது ஆம் ஆத்மி. இருப்பினும் பிரியங்கா காந்தியின் பிரச்சாரம், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக புதிதாக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பல்வேறு வகையான பிரச்சாரங்களை கையில் எடுத்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு தெம்பினை கொடுத்துள்ளது.
முந்தைய கருத்துக்கணிப்பு:
இந்நிலையில் ஏசியாநெட் நியூஸ் மற்றும் சிபோர் நடத்திய கருத்துக்கணிப்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் குஜராத் தேர்தலில் காங்கிரஸின் வாக்கு சதவீதம் 10 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என்றும், அதே சமயம் பாஜகவின் வாக்கு சதவீதம் ஒரு சதவீதமும் மற்றவர்களுக்கு ஐந்து சதவீதமும் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குஜராத் தேர்தல் இப்போது நடத்தப்பட்டால், 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக 133 முதல் 143 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி முறையே 28 முதல் 37 மற்றும் 5 முதல் 14 இடங்களைப் பெறலாம் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..மதுரை உசிலம்பட்டியில் தெரிந்த எலான் மஸ்க்கின் சாட்டிலைட் - இணையத்தில் வைரலாகும் சூப்பர் வீடியோ !!