100 கடைகள் ஓகே! ராஜினாமா செய்யுங்க.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை விட்ட சவால் !

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடையேயான வார்த்தை போர் அதிகரித்து வருகிறது.

Tn bjp president Annamalai challenge to Minister Senthil Balaji

திமுக ஆட்சி அமைந்த பிறகு மின்சார பிரச்னையில் தொடங்கி தற்போதைய கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் வரை இருவருக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது.

இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கட்சி தலைமைக்கு தெரியாமல் பாஜக மாவட்ட நிர்வாகிகள் எப்படி பந்த் அறிவிக்க முடியும் ? கட்சியை சரியான வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள் என கேட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறையானது அல்ல. அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

Tn bjp president Annamalai challenge to Minister Senthil Balaji

பாஜக மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம். கட்சி தலைமைக்கு தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் பந்த் என எப்படி சொல்ல முடியும் ? கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி பந்தை இரத்து செய்ய வேண்டும் என சொல்லியிருக்க வேண்டும்’ என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு 

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘சாராய அமைச்சருக்கு காதில் கோளாறு இருப்பதாக அறிகிறேன். "எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாமல் அறிவித்துவிட்டார்கள்" என்று நான் சொன்னதாக பொய்களை கட்டவிழ்த்து விடும் சாராய அமைச்சர் அதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்.

அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால் அதற்கு தண்டனையாக குறைந்தபட்சம் 100 மதுக் கடைகளையாவது சாராய அமைச்சர் மூட வேண்டும்.  அதுவும் முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓட வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க..மதுரை உசிலம்பட்டியில் தெரிந்த எலான் மஸ்க்கின் சாட்டிலைட் - இணையத்தில் வைரலாகும் சூப்பர் வீடியோ !!

இதையும் படிங்க..அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்! இதெல்லாம் அபத்தம் - எச்சரித்த தமிழ்நாடு காவல்துறை !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios