மதுரை உசிலம்பட்டியில் தெரிந்த எலான் மஸ்க்கின் சாட்டிலைட் - இணையத்தில் வைரலாகும் சூப்பர் வீடியோ !!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் இரவு 7 மணியளவில் திடீரென விண்ணில் தோன்றிய வால் நட்சத்திரம் போன்ற ஒளியை பலரும் கண்டு வியந்தனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம்:
உசிலம்பட்டியில் எலான் மஸ்க் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளின் தொகுப்பை கண்டு பொதுமக்கள் ஆச்சர்யமடைந்தனர். நேற்று மாலை வானில் பறக்கும் ரயில் போன்று தோன்றிய இந்த நிகழ்வை பலரும் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தனர்.
வால் நட்சத்திரம்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை சுமார் இரவு 7 மணியளவில் விண்ணில் தோன்றிய வால் நட்சத்திரம் போன்ற ஒளியை பலரும் கண்டு வியந்தனர். வானில் பறக்கும் ரயில் போன்று சென்ற இந்த சாட்டிலைட் எலான் மஸ்க்கின், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளின் தொகுப்பு என கூறப்படுகிறது.
இதையும் படிங்க..கோவை செல்கிறார் அண்ணாமலை.. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் !!
எலான் மஸ்க்:
உசிலம்பட்டி பகுதியில் தென்பட்ட இந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளின் தொகுப்பை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து பகிர்ந்தனர். இதேபோன்ற நிகழ்வு கேரளாவிலும் நேற்று மாலை 6.58 மணிக்கு நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நிலாக்கள் சென்றதைப் போல இருந்தது என்று பலரும் தங்களது கற்பனைகளை பகிர்ந்து இருந்தனர்.
ஸ்டார்லிங்க் சாட்டிலைட்:
இந்த சாட்டிலைட்டுகள் மீண்டும் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.58 மணிக்கு மீண்டும் வானில் தோன்றும் என்று கூறப்படுகிறது. ஸ்பேஸ் எக்ஸ் குறைந்த சுற்றுப்பாதையில் உள்ள சிறிய செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள 40 நாடுகளுக்கு அதிவேக இன்டர்நெட் இணைப்பை கொடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் தரை மட்டத்தில் இருந்து 550 கி.மீ உயரத்தில் பயணிக்கும்.
இதையும் படிங்க..அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்! இதெல்லாம் அபத்தம் - எச்சரித்த தமிழ்நாடு காவல்துறை !!
ஸ்பேஸ் எக்ஸ்:
இவற்றைப் பயன்படுத்தி 2023ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய அளவில் மொபைல் சேவையைத் தொடங்க SpaceX திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2019 முதல் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. இதுவரை இந்நிறுவனம் சுமார் 3000 சிறிய செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. பூமியில் உள்ள நிலையங்களிலிருந்து அனுப்பப்படும் சமிக்ஞைகள் செயற்கைக்கோள் மூலம் நுகர்வோரை சென்றடைகின்றன.
இணைய சேவை:
முதற்கட்டமாக மொத்தம் 12,000 செயற்கைக்கோள்களை அனுப்ப SpaceX திட்டமிட்டுள்ளது. பின்னர், நிறுவனம் மொத்த எண்ணிக்கையை 42,000 ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளது. தற்போது ஸ்டார்லிங்க் சுமார் ஐந்து லட்சம் பேருக்கு இணைய சேவையை வழங்கி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு சுமார் 82,000 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !