Asianet News TamilAsianet News Tamil

காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் டெல்லி செல்லாதது ஏன்? அதிமுக மாநிலச் செயலாளர் கேள்வி

காவிரி விவகாரத்தில் கர்நாடகா முதல்வர் தனது அமைச்சர்களுடன் டெல்லி செல்லும் போது தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏன் டெல்லி செல்லவில்லை என்று புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

First Published Sep 20, 2023, 10:08 PM IST | Last Updated Sep 20, 2023, 10:08 PM IST

புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நியாயமாக கிடைக்க வேண்டிய காவிரி நதிநீரை வழங்காமல் கர்நாடக முதலமைச்சர் சித்திராமையா நியாயப்படுத்துகிறார். காவிரி நதி நீர் வழங்குவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஏன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்கவில்லை? 

நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான காவிரி நீரை பெறாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் முதலமைச்சருக்கு ஆதரவாக செயல்படுகிறார். காவிரி நதிநீர் கிடைக்காமல் கடைமடையான காரைக்கால் பகுதி வறண்டு கிடக்கிறது.

காவிரி நதிநீர் பெறுவது தொடர்பாக புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Video Top Stories