புதுச்சேரியில் தேசிய ஒற்றுமை தின ஓட்டத்தில் ஓடிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்!!

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த தேசிய ஒற்றுமை தின ஓட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் துவக்கி வைத்து, அவரும் ஓடினார்.

First Published Oct 31, 2022, 2:30 PM IST | Last Updated Oct 31, 2022, 2:30 PM IST

சர்தர் வல்லபாய்படேல் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரியில் அரசு சார்பில் தேசிய ஒற்றுமை தினம் கடற்கரை காந்தி திடலில் அனுசரிக்கப்பட்டது.

அங்கு வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபாய்பட்டேல் படத்துக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பின்னர் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை துணைநிலை ஆளுநர் வாசிக்க அனைவரும் ஏற்றனர். தொடர்ந்து காவல்துறை மற்றும் என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் கலந்து கொண்ட ஒற்றுமை தின பேரணியையும் துணைநிலை ஆளுநர் தமிழிசை துவக்கி வைத்தார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரும் ஒற்றுமை ஓட்டத்தில் பங்கேற்றனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற ஓட்டம் மீண்டும் காந்திசிலை அருகே நிறைவு பெற்றது.

இந்திரா காந்தி சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை!!