இந்திரா காந்தி சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை!!

புதுச்சேரியில் இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு அரசு சார்பில் அவரது சிலைக்கு அமைச்சர் தேனி ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

Share this Video

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள் இன்று புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. சிக்னல் நடுவில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் தேனி ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமி காந்தன், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மும்மத பிரார்த்தனை மற்றும் பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர்களின் தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Video