ஆலயத்தின் மீது நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட அறிவாலயம் என்று தான் பெயர் வைத்துள்ளனர் - தமிழிசை கருத்து
அரசியல்வாதியாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கிராமலையம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் உணவகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நீட் தேர்வு மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான உதவியை செய்து வருகிறது.
தற்போது மாணவர்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் ஒரு சிலர் இதனை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். ஆலயத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அறிவாலயம் என பெயர் வைத்துள்ளதனர். எது சுத்தமாக இருந்தாலும் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அது குழந்தைகளாக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றார்.