புதுச்சேரி: குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சென்னை இளைஞர்கள் - வைரல் வீடியோ
புதுச்சேரியில் மது போதையில் தாறுமாறாக காரை ஓட்டி 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர் சென்னை இளைஞர்கள்.
புதுச்சேரி சுற்றுலா தளம் என்பதால் வார இறுதி நாட்களில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வாரத்தின் இறுதி நாட்களில் புதுச்சேரியில் குவிவது வழக்கம். சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் தமிழக பதிவு எண் கொண்ட காரை எடுத்துக் கொண்டு இன்று புதுச்சேரிக்கு வந்துள்ளனர். பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்த இவர்கள் பாண்டி மெரினா பீச்சில் உள்ள பாரில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
அதில் போதை தலைக்கேறியவுடன் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நகர் பகுதியில் ஒரு வழி பாதையான நேரு வீதியில் காரை தாறுமாறாக ஓட்டி வந்துள்ளனர். அப்போது வாகனத்தில் எதிரே வந்தவர்கள் மீதும் சாலையில் நடந்து சென்றவர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் அண்ணா சாலை வழியேசாலை வழியே முத்தியால்பேட்டை வழியாக வேகமாக சென்றுள்ளனர்.
மேலும் அங்கும் பல பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் லாஸ்பேட்டை ஏர்போர்ட் ரோடு நோக்கி வேகமாக மின்னல் வேகத்தில் பறந்து சென்றது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் கூச்சலிட்ட படி போலீசாரும், பொதுமக்களும் காரை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். அதற்குள்ளாக மின்னல் வேகத்தில் சென்று அந்த கார் லாஸ் பேட்டையில் இருந்து நரிக்குறவர் காலனி நோக்கி சென்றுள்ளது. மணல் பகுதி என்பதால் கார் சிக்கியவுடன் காரை மடக்கி பிடித்த பொதுமக்கள் காரை அடித்து நொறுக்கியதுடன் காரில் இருந்த ஐந்து பேருக்கும் தர்ம அடி கொடுத்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த லாஸ்பேட்டை போலீசார் அவர்களை காவல் நிலைய அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இதில் முதல் கட்ட விசாரணையில் இந்த இளைஞர்கள் 5- பேரும் சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் சுற்றுலாவுக்காக புதுச்சேரி சுற்றி பார்க்க வந்தவர்கள் போதை தலைக்கறி நிலையில் இது போன்ற விபத்தை ஏற்படுத்தி உள்ளது முதல் கட்ட விசாரணை தெரிய வந்துள்ளது . மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி பலபேர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Fact Check : "ஏ தள்ளு தள்ளு தள்ளு" நடுவழியில் ரயிலை தள்ளிய ராணுவ வீரர்கள் - வைரல் வீடியோ உண்மையா.?