Fact Check : "ஏ தள்ளு தள்ளு தள்ளு" நடுவழியில் ரயிலை தள்ளிய ராணுவ வீரர்கள் - வைரல் வீடியோ உண்மையா.?
நடுவழியில் நின்ற ரயிலை இந்திய ராணுவ வீரர்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் தள்ளும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது உண்மையா? அல்லது பொய்யான வீடியோ காட்சியா? என்பதை இங்கு பார்க்கலாம்.
வடிவேலு பட காமெடி போல சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில் பழுதாகி நிற்கும் பேருந்தை, பயணிகள் கீழே இறங்கி தள்ளி ஸ்டார்ட் செய்வதை போல சம்பவம் தான் நடைபெற்றுள்ளது. பழுதாகி நின்ற ரயிலை தள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
இந்த ரயில் எந்தப் பகுதியில் நின்றுவிட்டது. இதனை ராணுவ வீரர்கள் தள்ளுவதற்கு என்ன காரணம் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்த உண்மை நிலவரம் வெளிவந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நோக்கி ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி வந்துகொண்டிருந்தது.
இந்த ரயில் தெலங்கானாவின் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் பகிடிபல்லி, பொம்மைய்யபல்லி இடையே வரும்போது இரண்டு பெட்டிகளில் இருந்து திடீரென புகை கிளம்பியது என்று கூறப்படுகிறது. உடனே பயணிகள் சிலர் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதற்குள் தீ அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவத் தொடங்கியது.
வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்
நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டதும் பயணிகள் அவசர அவசரமாக ரயிலை விட்டு இறங்கி, சிறிது தூரமாகச் சென்றனர். தொடர்ந்து தீ மளமளவென மற்ற பெட்டிகளுக்கும் பரவியது. ரயில்வே ஊழியர்கள் துரிதமாகச் செயல்பட்டு அந்தப் பெட்டிகளை தனியாக கழற்றிவிட்டனர். இந்த சம்பவம் தான் உண்மை என்று தற்போது வெளியாகி இருக்கிறது.
ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அந்த வீடியோவில் இருப்பது உண்மைதான். இந்தச் சம்பவம் ஜூலை 7 ஆம் தேதி நடந்தது. ஆனால், பாதியில் நின்றதால் அல்ல. ரயிலில் தீ விபத்தைத் தடுப்பதற்காக ரயில்வே பணியாளர்கள், உள்ளூர் போலீஸாருடன் இணைந்து பயணிகளும் தீயைப் பரவாமல் தடுக்க உதவினார்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்படியா.! இறந்த நோயாளி ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்ட நர்ஸ் - அதிர்ச்சி சம்பவம்