திமுகவின் விடியல்!.. இலையை எந்த ஆடு சாப்பிடுகிறது - வெளுத்து வாங்கிய நாம் தமிழர் காளியம்மாள் !

ஈரோடு இடைத்தேர்தலில் வாக்குக்கு பணம் என்ற கடைசி ஆயுதத்தை திமுக, அதிமுக கையில் எடுத்துள்ளது என்று குற்றஞ்சாட்டி உள்ளார் நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள்.

First Published Feb 5, 2023, 7:19 PM IST | Last Updated Feb 5, 2023, 7:23 PM IST

நெல்லை மாவட்டம் இடிந்தகரை தூய லூர்து அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் இருந்து இடிந்தகரை வரையிலான 16 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவு பாய்மர படகு போட்டி நடைபெற்றது. 

இதில் 20க்கும் மேற்பட்ட பாய் மரப்படகுகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியினை துவங்கி வைத்த நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் முடிவு தமிழக மக்களுக்கான விடியலாகவும், நாம் தமிழர் கட்சியினுடைய விடியலாகவும் இருக்கும். அது பணத்தை ஆயுதமாக வைத்து தேர்தலை சந்திக்கிறது. 

ஒருபோதும் திமுகவின் விடியலாக இருக்காது. அதிமுக இரு அணிகளும் ஓரணிகளாக இணைவது மக்கள் பிரச்சனைக்காகவும் இணைய வேண்டும்.  இலையை எந்த ஆடு சாப்பிடுகிறது என்றும் மீண்டும் இலை எப்படி துளிர் விடப்போகிறது என்பது செய்தியாளர்களுக்கு தான் தெரியும். இலை என்றாலே ஆடு சாப்பிட தான் செய்யும் என்று கூறினார்.

இதையும் படிங்க..அந்த 8 நாட்கள்!.. இபிஎஸ் Vs ஓபிஎஸ் இணைப்பு உண்மையா.? பல்டி அடித்த அண்ணாமலை - பின்னணி என்ன.?

இதையும் படிங்க..ரிலீசுக்கு முன்பே ரூ.246 கோடியா!.. தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணின்னா சும்மாவா.! லியோ செய்த சாதனை!

Video Top Stories