Asianet News TamilAsianet News Tamil

அந்த 8 நாட்கள்!.. இபிஎஸ் Vs ஓபிஎஸ் இணைப்பு உண்மையா.? பல்டி அடித்த அண்ணாமலை - பின்னணி என்ன.?

அதிமுக இணைப்பு விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

Is BJP responsible for aiadmk Edappadi Palaniswami and OPS merger Annamalai who spoke
Author
First Published Feb 4, 2023, 6:16 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனை அடுத்து அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் இரு அணிகளுமே இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆதரவு கேட்டனர். இது தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஈரோடு கிழக்கின் வேட்பாளரை அதிரடியாக எடப்பாடி பழனிசாமி அறிவிக்க, ஷாக் ஆனது பாஜக. தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட போஸ்டரிலும் பாஜக இல்லாதது பாஜகவினரிடையே பெரும் புலம்பலை உண்டாக்கியது. கடைசியில் டெல்லி மேலிடம் அழைக்க, சென்றார் அண்ணாமலை. பிறகு இபிஎஸ்  ஓபிஎஸ் இணைய வேண்டும் என்று பல்டி அடித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

Is BJP responsible for aiadmk Edappadi Palaniswami and OPS merger Annamalai who spoke

இதையும் படிங்க..LEO: விஜய்யை துரத்தும் சர்ச்சை!.. தளபதி 67 டைட்டில் லியோ கிளப்பிய சர்ச்சை.. வச்சு செய்யும் நெட்டிசன்கள் !!

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அண்ணாமலை. அப்போது பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் போட்டியிடவில்லை. எங்கள் கூட்டணி கட்சியான அதிமுக போட்டியிட வேண்டும். அதுவும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே முயற்சித்து வருகிறோம்.

கடந்த 8 நாட்களாக பல முறை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரோடு பேசி வருகிறேன். கடந்த 31 ஆம் தேதி வரை காத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதன்பிறகு வேட்பாளரை அறிவித்தார். அவர் அறிவித்துவிட்டார். எனவே நாங்களும் அறிவிக்கிறோம் என்று ஓ.பன்னீர் செல்வமும் அறிவித்துவிட்டார். பாஜகவை பொறுத்த வரை உள்கட்சி விவகாரங்களில் ஒருபோதும் தலையிடாது.

ஒரு வேட்பாளர். வலுவான வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும். அதுதான் பலம் என்பதைத் தான் இருவரிடமும் எடுத்து சொன்னோம். ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தோம். கட்சி நலனுக்காக இணைந்து செயல்படுவதே நல்லது. தென்னரசுவும் மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டவர். அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றோம். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சில நிபந்தனைகளை சொன்னார்கள்.

Is BJP responsible for aiadmk Edappadi Palaniswami and OPS merger Annamalai who spoke

முடிவெடுக்க கொஞ்சம் கால அவகாசமும் கேட்டுக் கொண்டார். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. ஓ.பன்னீர் செல்வம் தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். சுயேட்சை வேட்பாளரை பாஜக ஒரு போதும் ஆதரிக்காது. ஒரு வேட்பாளர். அதுவும் இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிட வேண்டும். அவருக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு.

அவரது வெற்றிக்காக பாடுபடுவோம் என்பதை ஏற்கனவே இருவரிடமும் தெரிவித்துவிட்டோம். கடந்த 8 நாட்களாக என்னென்ன பேசினோம் என்பதை வெளியில் சொல்ல முடியாது. ஆனால் தலைவர்களுக்கு தெரியும். 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்தான் நமக்கு முக்கியமான தேர்தல். எனவே இந்த விசயத்தில் இன்று மாலைக்குள் நல்ல முடிவு வரும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

இதையும் படிங்க..மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமின் கடைசி வீடியோ!.. ரசிகர்கள் சோகம் !!

Follow Us:
Download App:
  • android
  • ios