LEO: விஜய்யை துரத்தும் சர்ச்சை!.. தளபதி 67 டைட்டில் லியோ கிளப்பிய சர்ச்சை.. வச்சு செய்யும் நெட்டிசன்கள் !!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு லியோ (Leo) எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர் கமல் ஹாசனின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜயுடன் இணைகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்துக்கு தளபதி 67 என்று பெயர் வைத்திருந்தார்கள். ஏற்கனவே சொல்லியது போல பிப்ரவரி 1, 2, 3 என்று மூன்று நாட்களும் அப்டேட் வந்து கொண்டிருக்கிறது.
இன்று அறிவித்தபடி மாலை 5 மணிக்கு தளபதி 67 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படம் இந்தாண்டு அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று ப்ரோமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ப்ரோமோவில், தளபதி விஜய் சாக்லேட் க்ரீமை தயார் செய்து கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் தீப்பிழம்புடன் கத்தி ஒன்றும் தயார் செய்யப்படுகிறது. அந்தக் கத்தியை சாக்லேட் க்ரீமுக்குள் முக்கி எடுக்கும் விஜய் ப்ளடி ஸ்வீட் என்று அதிரடியாக சொல்லி மாஸ் காட்டியுள்ளார் விஜய்.
விக்ரம் பட ப்ரோமோவை போலவே தளபதி விஜயின் லியோ பட ப்ரோமோவும் பக்கா மாஸாக உருவாகியுள்ளது. தற்போது இதனை விஜய் ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி வர, அதற்கு இணையாக மற்றொரு பக்கம் எதிர்கருத்துக்களும் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று வெளியிடப்பட்ட ரத்தத்துடன் விஜய் உருவம் வரையப்பட்ட அப்டேட் போஸ்டரும் இதே சர்ச்சையில் சிக்கியது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள், அப்பவே அஜித் செய்து விட்டார் என்று பில்லா 2 பட போஸ்டரை குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர். பில்லா 2 போஸ்டரிலும் இந்த மாதிரி ப்ளட் ஆர்ட்டில் டிசைன் செய்யப்பட்டதை பதிவிட்டு கலாய்த்து வந்தனர்.
தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்திற்கு வைக்கப்பட்டுள்ள லியோ பெயரும் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. லியோ என்ற பெயரில் ஏற்கனெவே புகழ்பெற்ற காபி நிறுவனம் உள்ளது. இந்த காபி நிறுவனத்தின் பெயரை படத்திற்கு வைத்துள்ளதால் காப்பி ரைட்ஸ் பிரச்சனை வருமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.