கோவை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்

ஈரோடு செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக வரவேற்றனர்.

First Published Apr 29, 2023, 5:50 PM IST | Last Updated Apr 29, 2023, 5:50 PM IST

அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த உறுப்பினரான இ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்திப்பதற்காகவும், இதர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஈரோடு வந்தடைந்தார். இதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவருக்கு திமுக தொண்டர்கள் புத்தகங்கள் வழங்கியும், பொன்னாடைகள் வழங்கியும் உற்சாக முழக்கங்களை எழுப்பியும் வரவேற்பு அளித்தனர். 

தொண்டர்களின் அன்பளிப்புகளை பெற்றுக்கொண்ட அவர், பின்னர் சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டார். இந்நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். ஈரோட்டில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று இரவு மீண்டும் கோவை வழியாக விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.

Video Top Stories