Asianet News TamilAsianet News Tamil

3 திருமணம் செய்த பெண்... 2வது கணவருக்கு விஷ ஊசி... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

சொத்துக்கு ஆசைப்பட்டு 2வது கணவருக்கு விஷ ஊசி போட்ட மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

First Published Feb 3, 2023, 7:42 PM IST | Last Updated Feb 3, 2023, 7:47 PM IST

சொத்துக்கு ஆசைப்பட்டு 2வது கணவருக்கு விஷ ஊசி போட்ட மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரை அடுத்த குறிச்சி தோட்டத்துப் பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த தேவி என்பவரை திருமணம் செய்தார். அவர்கள் குறிச்சிதோட்டத்துப்பாளையத்தில் வசித்து வந்தனர். அவர்களுடன் சுப்பிரமணியின் தாயாரும் வசித்து வந்தார். இந்த நிலையில் தேவிக்கும், சுப்பிரமணியின் தாயாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சுப்பிரமணியின் தாயார் கோபித்துக்கொண்டு அவரது சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி சுப்பிரமணி காய்ச்சலால் அவதிப்பட்டார். அப்போது அவரது காலில் தேவி ஊசி செலுத்தியுள்ளார். இதில் சுயநினைவை இழந்த சுப்பிரமணி திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய ரத்தத்தில் பூச்சிமருந்து கலந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கூலிப்படையுடன் சென்று வீடுபுகுந்து தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலரின் கணவர்

இதனிடையே மருத்துவமனையில் இருந்து தப்பிய தேவி தலைமறைவானார். இதையடுத்து விஷ ஊசி செலுத்தி தன்னை கொல்ல முயன்றதாக மனைவி மீது சுப்பிரமணி குன்னத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேவியை தேடி வந்த நிலையில் நாமக்கல்லில் தேவி பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று தேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் சுப்பிரமணிக்கு 50 வயது ஆகியும் திருமணமாகவில்லை என்றும், அவருக்கு சொந்தமாக சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலம் இருப்பதும் புரோக்கர் மூலம் தெரியவந்தது. எனவே சுப்பிரமணியை 2 ஆவதாக திருமணம் செய்தேன். இதற்கிடையில், நாமக்கல்லைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்து இருப்பதும், அவருக்கு 2 ஆவது திருமணம் செய்து வைக்க உறவினர்கள் பெண் பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

இதையும் படிங்க: திருட்டு சம்பவம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

எனவே அவரை திருமணம் செய்தால் சுப போகமாக வாழலாம் என்று முடிவு செய்தேன். அதற்கு முன்பு சுப்பிரமணியை கொன்றுவிட்டால் அவருடைய சொத்துகளும் மனைவி என்ற பந்தத்தில் எனக்கு கிடைக்கும் என்ற ஆசை வந்தது. எனவே சுப்பிரமணிக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயற்சித்தேன். ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை. அதன் பின்னர் போலீசார் பிடித்து விடுவார்கள் என பயந்து நாமக்கல்லுக்கு தப்பி சென்று 3 ஆவதாக அந்த கோடீஸ்வரரை 27 ஆம் தேதி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தேன். இந்த நிலையில் போலீசில் சிக்கிக் கொண்டேன் என்று தேவி வாக்குமூலம் அளித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், தேவிக்கு பின்னணியில் இருப்பது யார்? விஷ ஊசி வாங்கி கொடுத்தது யார்? வசதியானவர்களையும், தொழில் அதிபர்களையும் கண்டறிந்து அவர்களிடம் தேவியை பழக வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைதான தேவியிடம் இருந்து 6 பவுன் தங்க நகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Video Top Stories