அட.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..! தனுஷை தொடர்ந்து பாலிவுட்டில் மாஸாக எண்ட்ரி கொடுத்த சிம்பு
தமிழில் மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த சிம்பு தற்போது சைலன்டாக பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் உடல் எடையை குறைத்த பின்னர் நடித்த மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. இதனால் சிம்புவின் மார்க்கெட்டும் மளமளவென உயர்ந்துள்ளது. தற்போது நடிகர் சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் கேங்ஸ்டராக நடிக்கிறார் சிம்பு.
இதையடுத்து இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இதுதவிர வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த இரண்டு படங்களையும் வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார்.
இதையும் படியுங்கள்... வடகைத்தாய் சர்ச்சை... விக்னேஷ் சிவன் - நயன்தாரா விசாரணைக்கு அழைப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் சிம்பு, சைலண்டாக பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் பாடகராக, இந்தியில் சட்ரம் ரமணி இயக்கத்தில் உருவாகி உள்ள டபுள் எக்ஸ்.எல் என்கிற பாலிவுட் படத்தில் தான் சிம்பு ஒரு குத்துப் பாடலை பாடி உள்ளார். இப்படத்தில் வலிமை பட நாயகி ஹூமா குரேஷியும், லிங்கா பட நாயகி சோனாக்ஷி சின்ஹாவும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
இதுதவிர சிம்புவின் நண்பரும், நடிகருமான மஹத் ராகவேந்திராவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்காக இப்படத்தில் இடம்பெறும் டாலி டாலி என்கிற பாடலை சிம்பு பாடி கொடுத்துள்ளார். கொலவெறி பாடல் பாணியில் பெரும்பாலும் ஆங்கில் வரிகளே இதில் இடம்பெற்றுள்ளன. இப்பாடல் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Jailer Movie: கடலூரில் மாஸ் காட்டிய தலைவர்..! ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல்..!