MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jailer Movie: கடலூரில் மாஸ் காட்டிய தலைவர்..! ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல்..!

Jailer Movie: கடலூரில் மாஸ் காட்டிய தலைவர்..! ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புக்கு தலைவர் மாஸ் என்ட்ரி கொடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 14 2022, 01:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த மாதம் முழுவதும் சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள, பிலிம் சிட்டி ஒன்றில் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு கடலூர் வந்துள்ளனர். 
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

கடலூர் மாவட்டம் நத்தம் பகுதியில் இந்த படத்தின் சண்டை காட்சி, மற்றும் யோகி பாபு நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும் போது அவரை காண வேண்டும் என, நந்தம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டுள்ளனர். வழக்கம் போல் 'ஜெயிலர்' படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு தலைவர் காரில் மாஸ் என்ட்ரி கொடுத்த போது, காரில் இருந்தபடியே ரசிகர்களை பார்த்து கை கூப்பி வணங்கி விட்டு சென்றார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: வடகைத்தாய் சர்ச்சை... விக்னேஷ் சிவன் - நயன்தாரா விசாரணைக்கு அழைப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
 

35

அதே போல், இயக்குனர் நெல்சன் திலீப் குமாரும்... உயரமான இடத்தில் இருந்து, ரசிகர்களை நோக்கி கை அசைத்து தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார். இந்த புகைப்படமும் வெளியாகி உள்ளது.

45

மிகவும் பரபரப்பாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து...  ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுதவிர நடிகை தமன்னா, கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், நடிகர்கள் வஸந்த்ரவி, ஜெய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்: Chandramukhi 2 : ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2வில் இணைந்த காஜல் அகர்வால்.. பரபரப்பாக பரவும் தகவல்
 

55

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், ரஜினிகாந்த்ஜெயிலர் மகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Vijay : மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா தளபதி? இயக்குநர்கள் வைத்த கோரிக்கை; ஏற்பாரா விஜய்?
Recommended image2
Numerology: வேலையா, பிசினஸா? எதுல உங்களுக்கு ஜாக்பாட்? பிறந்த தேதியை வெச்சே தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
Now Playing
Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved