Chandramukhi 2 : ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2வில் இணைந்த காஜல் அகர்வால்.. பரபரப்பாக பரவும் தகவல்
ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார்...
kajal aggarwal
தென்னிந்திய சினிமாவுலகிள் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் டாப் 10 நாயகர்களுக்கு ஜோடியானது மூலம் இங்கு பிரபலமான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பலமொழி படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். பிசியாக இருந்த வேளையிலேயே காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு கெளதம் கிச்சலு என்பவரை காதல் கரம் பிடித்தார். இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கர்ப்பகால விடுமுறைக்கு பிறகு தற்போது சகஜ நிலைக்கு வந்துள்ள காஜல், அவ்வப்போது ஒர்கவுட் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் திருமணத்திற்கு முன்னரே உலக நாயகனின் இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமாக இருந்தார். ஆனால் இவர் கர்ப்பம் தரித்த காரணத்தால் படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல் பரவியது. பின்னர் சமீபத்தில் இந்த தகவலையும் முற்றிலும் மறுத்து, தான் விரைவில் படப்பிடிப்பில் இணைய உள்ளதாகவும் காஜல் அகர்வால் உறுதிப்படுத்தி இருந்தார். அதற்காக சண்டை பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டார்.
மேலும் செய்திகளுக்கு...சீரியல் நடிகை திவ்யா வழக்கு..தலைமறைவான கணவர் அர்னவ்?
Chandramukhi 2
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த சந்திரமுகி படத்தை பி. வாசு இயக்கி இருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த், வடிவேல், ஜோதிகா, பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முன்னதாகவே இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வாசு வெளியிட்டிருந்தார். ஆனால் பல சூழ்நிலை காரணமாக இந்த படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது.
Chandramukhi 2
மேலும் செய்திகளுக்கு...நயன்தாரா முதல் நாகார்ஜுனா வரை... சொந்தமாக விமானம் வைத்திருக்கும் தென்னிந்திய நடிகர், நடிகைகள் லிஸ்ட் இதோ
பின்னர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க உள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ராதிகா சரத்குமார், அனுஷ்கா செட்டி, வடிவேலு இந்த படத்தில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்திடம் ஆசிர்வாதம் பெற்ற புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் கூட படத்திற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றிய புகைப்படங்களையும் பகிர்ந்து சந்திரமுகி 2 படப்பிடிப்பிற்கு தயாராகி விட்டதாகவும் கூறியிருந்தார். கீரவாணி இசையமைக்க இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஆடி ராஜசேகர் மற்றும் கலை இணயக்குநராக தோட்டா தரணி பணியாற்ற உள்ளனர். லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது.