நயன்தாரா முதல் நாகார்ஜுனா வரை... சொந்தமாக விமானம் வைத்திருக்கும் தென்னிந்திய நடிகர், நடிகைகள் லிஸ்ட் இதோ
சொந்தமாக விமானம் வைத்திருக்கும் தென்னிந்திய நடிகர், நடிகைகள் யார்... யார், அவற்றின் மதிப்பு என்ன என்பது பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பெரும்பாலும் ஆடம்பர வாழ்க்கை தான் வாழ்ந்து வருகின்றனர். படத்துக்கு படம் சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே செல்லும் நடிகர், நடிகைகள் அதனை வைத்து தனியாக பிசினஸ் தொடங்குவது, கார்களை வாங்குவது, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது என பல்வேறு விதமாக செலவழிப்பார்கள். அந்த வகையில், சொந்தமாக விமானம் வைத்திருக்கும் தென்னிந்திய நடிகர், நடிகைகள் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
ராம்சரண்
நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் சொந்தமாக விமானம் ஒன்றை வைத்துள்ளார். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்கும், வெளிமாநிலங்களில் நடக்கும் பட விழாக்களில் பங்கேற்பதற்காகவும் அவர் இந்த விமானத்தை பயன்படுத்தி வருகிறார். இதுதவிர TRUjet என்கிற விமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் ராம்சரண்.
நாகார்ஜுனா
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகார்ஜுனாவும் சொந்தமான விமானம் ஒன்றை வைத்துள்ளார். இதனை அவரது மகன்களாக அகில் மற்றும் நாக சைதன்யா ஆகியோரும் பயன்படுத்துகின்றனர்.
ஜூனியர் என்.டி.ஆர்.
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் தனி விமானம் ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். குடும்பத்தினருடன் பயணிப்பதற்காக அவர் இவ்விமானத்தை பயன்படுத்தி வருகிறார். அவர் வைத்திருக்கும் விமானத்தின் விலை ரூ.80 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன்
அலவைகுந்தபரமுலு, புஷ்பா என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து டோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரும் சொந்தமாக விமானம் ஒன்றை வைத்துள்ளார். குடும்பத்தினருடன் வெளிமாநிலங்களுக்கு செல்லும் போது அவர் இந்த விமானத்தை பயன்படுத்தி வருகிறார்.
இதையும் படியுங்கள்... பொறி பொறி பொறி பறக்க ஆட்டம் போடும் ஆதித்த கரிகாலன்... பொன்னியின் செல்வன் ‘சோழா சோழா’ பாடல் வீடியோ இதோ
மகேஷ் பாபு
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு, தனி விமானம் வைத்துள்ளார். அவர் தன் குடும்பத்தினருடன் பயணிப்பதற்காகவும், தொழில் ரீதியிலான பயணங்கள் மேற்கொள்வதற்காகவும் இந்த விமானத்தை பயன்படுத்தி வருகிறார்.
பிரபாஸ்
பாகுபலி படத்துக்கு பின் பான் இந்தியா நடிகராகிவிட்ட பிரபாஸ், தனி விமானம் ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். தொழில் ரீதியான பயணங்கள் மேற்கொள்வதற்காக அவர் இந்த விமானத்தை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
நயன்தாரா
கோலிவுட்டில் தனி விமானம் வைத்திருக்கும் நடிகர், நடிகைகள் என பார்த்தால் நடிகை நயன்தாரா மட்டும் தான் சொந்தமாக விமானம் வைத்துள்ளார். கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் வாடகைக்கு எடுத்து தான் பயன்படுத்தி வருகின்றனர். நடிகை நயன்தாரா கேரளாவை சேர்ந்தவர் என்பதால், அடிக்கடி உறவினர்களை பார்க்க கேரளா செல்வதற்காக அவர் இந்த தனி விமானத்தை பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... துணிவு vs வாரிசு... பொங்கலுக்கு விஜய் - அஜித் படங்கள் மோதுவது உறுதி..! ரிலீஸ் தேதியுடன் வந்த தரமான அப்டேட் இதோ