Asianet News TamilAsianet News Tamil

எங்கே என்ன பேசனும்.. எனக்கு தெரியும்.! அரசியல் விமர்சனம் குறித்த கேள்விக்கு நடிகர் சித்தார்த் சுளீர் பதில்

எங்கே என்ன பேச வேண்டும் என எனக்கு தெரியும், அதை அங்கே பேசிக்கிறேன் என்று அரசியல் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு நடிகர் சித்தார்த் பதில் அளித்துள்ளார்.

கோவை ப்ரோட்வே மாலில் திரையிடப்பட்டுள்ள டக்கர் திரைப்படத்தை அப்படத்தில் நடித்துள்ள நடிகர் சித்தார்த் கண்டு கழித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சித்தார்த், “டக்கர் திரைப்படம் பொழுதுபோக்காக ஜாலியா பாப்ப் கார்ன் சாப்பிட்டு கொண்டே பார்ப்பதற்கான படம். 2k கிட்ஸ்க்கு பிடித்தமான கமர்சியல் படம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை யாரெல்லாம் இளமையாக நினைக்கிறார்களோ அவர்கள் அனைவரும் இளைஞர்கள் தான். பொதுமக்கள் பொழுதுபோக்கு படங்கள் ரசித்தால் நாங்களும் பொழுதுபோக்கு  படங்களை எடுக்க வசதியாக இருக்கும்.காதல் படங்களில் இது ஒரு வித்தியாசமான காதல் படம். அடுத்ததடுத்து ஆக்சனுக்கு செல்வது பார்வையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கையில் தான் உள்ளது.

பாய்ஸ் திரைப்படம் வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகியுள்ளது. 20 ஆண்டுகள் என்பதை 2.0 ஆக எடுத்துக்கொள்கிறேன் எனவும் கூறினார். பேன் இந்தியா படமாக மட்டும் அல்லாமல் , பேன் வேர்லட் ஆக படம் பார்க்கபட வேண்டும். தான் தற்போது "இந்தியன்-2 வில் நடித்து கொண்டிருக்கிறேன். அரசியல் விமர்சனங்கள் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த், எங்கே என்ன பேச வேண்டும் என எனக்கு தெரியும், அதை அங்கே பேசிக்கிறேன்” என்று பதில் அளித்தார்.

இது நம்ப லிஸ்டுலையே இல்லையே! லியோ படத்தில் இணைந்த தனுஷ் பட ஹீரோயின்? வெளியான ஆச்சர்ய தகவல்!

Video Top Stories