bigg boss 6 promo : காலில் விழுந்தும் கேட்காததால் கடுப்பான ஜனனி..குயின்சியை விளாசும் ப்ரோமோ இதோ

ஜனனி துண்டை தூக்கி வீசி மீண்டும் மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என இலங்கைத் தமிழில் பேசி கோபமடையும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Share this Video

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6, தற்போது 26 வது நாளில் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக 21 போட்டியாளர்களுடன் கலகலப்பாக துவங்கிய இந்த சீசனில் தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். 

இன்று வார இறுதி நாள் நாளை கமலஹாசன் போட்டியாளர்களை சந்திப்பார். முன்னதாக அந்த டிவி இந்த டிவி என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அனைவரும் தங்களது திறமைகளை வெளிகாட்டியிருந்தனர்.இன்று வெளியான முதல் ப்ரோமோவில் அசிம், விக்ரமன் உடன் மகேஸ்வரி சண்டையிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...நாமம் வைத்திருந்தால் சரியான... படித்த தந்தை... சர்ச்சையில் சிக்கிய கோமாளி பட இயக்குனர்

தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் குயின்சிக்கும் ஜனனிக்கும் சண்டை வருகிறது. அதாவது குயின்சியின் துண்டை ஜனனி தெரியாமல் எடுத்து விடுகிறார். ஆனால் அதற்காக குயின்சி ஜனனிடம் தனது பெற்றோர்களே தனது பொருட்களை தொட மாட்டார் என்பது போல பேச, இதனால் குயின்சியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் ஜனனி. இருந்தும் மீண்டும் மீண்டும் இதையே கூறிக் கொண்டிருக்கிறார் குயின்சி. இதனால் கடுப்பான ஜனனி துண்டை தூக்கி வீசி மீண்டும் மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என இலங்கைத் தமிழில் பேசி கோபமடையும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Related Video