Asianet News TamilAsianet News Tamil

டிவி நிகழ்ச்சியை வைத்து புது பிளான் போட்ட பிக்பாஸ் ...முதல் ப்ரோமோ இது

இந்த விவாத நிகழ்ச்சியில் தனலட்சுமி மற்ற போட்டியார்களுடன்  மோதிக் கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6. தற்போது 23 ஆவது நாளை  தொட்டு உள்ளது. 20 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் தமிழ் தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே மிச்சமுள்ளனர். முதல் வார எலிமினேஷனில் சீரியல் நடிகை சாந்தி வெளியேறினார். இதைத் தொடர்ந்து சென்ற வாரம் அசல் வெளியேறினார். தற்போது ஐந்து போட்டியாளர்கள் நாமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர்.

மற்ற நேரங்களில் அமைதியாக இருக்கும் போட்டியாளர்கள் டாஸ்க் என்று வந்துவிட்டால் தங்களது உண்மை குணத்தை வெளிக்காட்டி கடுமையாக மோதிக் கொள்வதை மூன்றாம் நாளில் இருந்தே தொடங்கி விட்டனர். தற்போது வெளியாகியுள்ள புரோமோவிலும் அதுதான் தொடர்கிறது.

மேலும் செய்திகளுக்கு...Rambha Car Accident : கார் விபத்தில் சிக்கிய ரம்பா...மருத்துவமனையில் காயங்களுடன் இளைய மகள்

டிவி ஷோ என்னும் பெயரில் இந்த வார டாஸ் கொடுக்கப்படுகிறது. அதில் ஒரு டீமிற்கு ராசிபலன் கூற வேண்டும், ஒரு டீமிற்கு சமையல் நிகழ்ச்சி நடத்த வேண்டும், ஒரு டீமிற்கு விவாதம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இந்த விவாத நிகழ்ச்சியில் தனலட்சுமி மற்ற போட்டியார்களுடன்  மோதிக் கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

Video Top Stories