Rambha Car Accident : கார் விபத்தில் சிக்கிய ரம்பா...மருத்துவமனையில் காயங்களுடன் இளைய மகள்
தானும் தன் மூத்த மகளும் சிறுகாயங்களுடன் நன்றாக இருப்பதாகவும், தனது இளைய மகள் சாஷா மட்டும் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தவர் ரம்பா. தொண்ணூறுகளின் இறுதியில் இருந்து 2000-களின் முற்பகுதி வரை முன்னணி நடிகையாக வளம் வந்தவர்.
actress ramba
தெலுங்கு படம் மூலம் கலைத்துறைக்கு அறிமுகமான ரம்பா.. உழவன் என்னும் படத்தில் காமியோ ரோலில் தோன்றியிருந்தார். பின்னர் கார்த்திக் உடன் உள்ளத்தை அள்ளித்தா படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது.
மேலும் செய்திகளுக்கு....varisu : படப்பிடிப்பு தளத்தில் ஆழகிய குழந்தையுடன் விஜய்...யாருடைய வாரிசு தெரியுமா?
Actress Ramba
இந்துவாக வந்து அழகிய லைலாவாக மனதை கவர்ந்தார் ரம்பா. தொடர்ந்து செங்கோட்டை, சுந்தர புருஷன், அருணாச்சலம், ஜானகிராமன், காதலா காதலா, தேசிய கீதம், காதலர் தினம் என தொடர்ந்து ஹிட் படங்களில் நாயகியாக நடித்தார்.
actress ramba
இதனால் இங்கு அசைக்க முடியாத ஒரு இடத்தையும் தக்க வைத்துக் கொண்டார் ரம்பா. இறுதியாக 2010 ஆம் ஆண்டு வெளியான பெண் சிங்கம் படத்தில் இவர் நடித்திருந்தார். முன்னணி நாயகியாக வலம் வந்த ரம்பா கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டார்.
Actress Ramba
இவர்களது திருமணம் கர்நாடக மாநிலத்தில் உள்ள திருமலையில் நடைபெற்றது. இது தொடர்ந்து இந்த தம்பதிகள் டொராண்டோவில் குடியேறி விட்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
actress ramba
சமீபத்தில் தன் கணவரை இழந்த மீனாவை சந்திப்பதற்காக சென்னை வருகை தந்திருந்தார் ரம்பா. இவருடைய புகைப்படங்களும் வைரலானது. அதோடு அவரது மூன்றாவது மகன் பிறந்தநாள் குறித்தான புகைப்படங்களும் வெளியாகியிருந்தது.
ramba
இந்நிலையில் கார் விபத்தில் ரம்பா சிக்கி உள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ரம்பா வெளியிட்ட பதிவில் பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து வருகைகள் தங்களது கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. தானும் தன் மூத்த மகளும் சிறுகாயங்களுடன் நன்றாக இருப்பதாகவும், தனது இளைய மகள் சாஷா மட்டும் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.