- Home
- Cinema
- Nithya Menen : கல்யாணத்துக்கு ரெடியான நித்யா மேனன்... ஆனா மாப்பிள்ளைக்கு அந்த ஒரு தகுதி இருக்கணுமாம்!
Nithya Menen : கல்யாணத்துக்கு ரெடியான நித்யா மேனன்... ஆனா மாப்பிள்ளைக்கு அந்த ஒரு தகுதி இருக்கணுமாம்!
Nithya Menen Talks About Marriage : நம்ம சுதந்திரத்தைப் பறிச்சு, நம்ம முடிவுகளை கன்ட்ரோல் பண்ற ஒரு பார்ட்னரோட வாழ்றது ரொம்ப கஷ்டம்னு நடிகை நித்யா மேனன் சொல்லியிருக்காங்க.

கல்யாணம் பற்றி மனம் திறந்த நித்யா மேனன்
தனது சூப்பரான நடிப்பால சவுத் இந்தியால ஏகப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தவங்க நித்யா மேனன். கதைத் தேர்வுல மட்டும் இல்ல, பர்சனல் லைஃப்லயும் அவங்களுக்குன்னு ஒரு தெளிவான பார்வை இருக்கு. அவங்களோட கல்யாணப் பேச்சு எப்போவுமே சோஷியல் மீடியால ட்ரெண்டிங் தான். சமீபத்துல ஒரு பாட்காஸ்ட்ல கலந்துக்கிட்ட நித்யா... காதல், ரிலேஷன்ஷிப், கல்யாணம் பத்தி பேசுன விஷயங்கள் இப்போ வைரலாகிட்டு இருக்கு. தனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னு எங்கும் சொல்லல, தன்னை புரிஞ்சுக்கிற சரியான ஆளுக்காக காத்துட்டு இருக்கேன்னு கிளியரா சொல்லிருக்காங்க.
இந்த பாட்காஸ்ட் பேட்டியில நித்யா மேனன் தனது பர்சனல் லைஃப் பத்தி நெறைய விஷயங்களை ஷேர் பண்ணிருக்காங்க. கடந்த கால ரிலேஷன்ஷிப்ல நடந்த அனுபவங்கள், பார்ட்னர்கிட்ட இருந்து எதிர்பார்க்கிற சுதந்திரம், கல்யாணம் பத்தின தன்னோட பார்வைய ரொம்ப வெளிப்படையா சொல்லிருக்காங்க.
அப்படிப்பட்ட ரிலேஷன்ஷிப்ல இருக்கப் புடிக்கல!
ரிலேஷன்ஷிப்னா வெறும் காதல், கவர்ச்சி, ஒண்ணா டைம் ஸ்பெண்ட் பண்றது மட்டும் இல்லன்னு சொல்றாங்க நித்யா. ஒருத்தருக்கு ஒருத்தர் மரியாதை, நம்பிக்கை, தனிப்பட்ட சுதந்திரம் இருக்கணுமாம். தன்னோட கடந்த கால ரிலேஷன்ஷிப்ஸ்ல சுதந்திரம் பறிபோனப்போ அதையெல்லாம் பேஸ் பண்ணிருக்கேன்னு அவங்க நினைவு கூர்ந்தாங்க.
சிலரோட கேரக்டர் எப்படின்னா, அவங்ககூட இருக்கும்போது நமக்குன்னு எந்த ஐடென்டிட்டியும் இருக்காது. சுதந்திரமா மூச்சு விடக்கூட முடியாதுன்னு தோணும். நம்ம ஒவ்வொரு முடிவையும் கன்ட்ரோல் பண்ண நெனைக்கிறவங்களோட ரிலேஷன்ஷிப்ல இருக்குறது ரொம்ப கஷ்டம். அப்படி ஒரு சூழ்நிலை வந்தா, அந்த உறவுல இருந்து வெளிய வர்றதுதான் நல்ல முடிவுன்னு நித்யா சொல்லிருக்காங்க.
இது பயத்துல எடுத்த முடிவில்ல, வாழ்க்கையில நடந்த அனுபவங்கள்ல இருந்து கத்துக்கிட்ட பாடம்னு அவங்க விளக்கம் கொடுத்தாங்க. சில நேரங்கள்ல அந்த உறவைக் காப்பாத்துறத விட, அதுல இருந்து வெளிய வந்து நம்மள நாம காப்பாத்திக்கிறது ரொம்ப முக்கியம்னு அவங்க சொன்னாங்க.
கல்யாணத்துக்கு எதிரி இல்ல, ஆனா சரியான ஆள் அமையணும்!
முன்னாடி நித்யா மேனன் பேசுன சில விஷயங்களப் பாத்து, அவங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லன்னு ஃபேன்ஸ் நெனச்சிட்டாங்க. ஆனா இப்போ அந்த வதந்திகளுக்கு அவங்க முற்றுப்புள்ளி வச்சிட்டாங்க. எனக்கு கல்யாணம் பண்ணிக்கப் புடிக்கலன்னு நான் எப்போவுமே சொல்லல. எனக்கும் கல்யாணம் பண்ணிக்க ஆசை இருக்கு, ஆனா கல்யாணம் பண்ணிக்கணுமேங்குற ஒரே காரணத்துக்காக யாரோ ஒருத்தர செலக்ட் பண்ண முடியாதுன்னு பட்டவர்த்தனமா சொல்லிட்டாங்க.
தன் வாழ்க்கையில வர்ற நபர் தன்னோட சுதந்திரத்த மதிக்கணும், தன்னோட கேரக்டர், கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு அவங்க சொல்றாங்க. ஒருத்தரை ஒருத்தர் கன்ட்ரோல் பண்றதுக்கு பதிலா, ரெண்டு பேரும் சேர்ந்து வளர என்கரேஜ் பண்ணிக்கணும்னு அவங்க எதிர்பார்க்குறாங்க.
அப்படி ஒரு ஆள் கிடைச்சா கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன், ஒருவேளை அப்படி ஒருத்தர் கிடைக்கலனா வாழ்க்கைப் பூரா கல்யாணம் பண்ணிக்காம இருக்கவும் ரெடின்னு நித்யா தன்னோட முடிவ ஸ்ட்ராங்கா சொல்லிருக்காங்க. அவங்க சொன்ன இந்த வார்த்தைகளுக்கு இப்போ ஃபேன்ஸ் ஃபிடா ஆகிருக்காங்க.
டாக்சிக் ரிலேஷன்ஷிப்
சில ரிலேஷன்ஷிப்ஸ்ல மனுஷங்களுக்கு சுதந்திரமே இல்லாம போயிடும். பார்ட்னர் நம்மள கன்ட்ரோல் பண்றாங்க, நம்ம இஷ்டப்படி வாழ விடலன்னு தோணும்போது மனதளவுல ரொம்ப உடைஞ்சு போயிடுவோம்னு நித்யா சொன்னாங்க.
அப்படிப்பட்ட உறவுகள்ல இருந்து வெளிய வர்றது ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். ஆனா வெளிய வந்ததுக்கு அப்புறம் நம்ம வாழ்க்கைய நமக்கு பிடிச்ச மாதிரி அமைச்சுக்க ஒரு சான்ஸ் கிடைக்கும், ஒரு புது உலகத்துல அடி எடுத்து வச்ச ஃபீலிங் வரும், மனசுக்கு நிம்மதி கிடைக்கும்னு தன்னோட அனுபவத்த ஷேர் பண்ணிருக்காங்க.
படங்கள்ல பிஸியாக இருக்கும் நித்யா மேனன்
தற்போது அவங்க நடிச்சிருக்க இந்திப் படம் 'மிஸ்டர் அண்ட் மிசஸ் க்ரே' ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. அங்குர் பஜ்னி, விஷால் ரஞ்சன் மிஸ்ரா சேர்ந்து இயக்குன இந்த படத்துல விவேக் ஓபராயும் லீட் ரோல்ல நடிச்சிருக்காரு. கள்ளக்காதல், பண மோசடி சுத்தி வர்ற கதையா இந்த படம் உருவாகிருக்கு. டிசம்பர் 11 அன்னைக்கு இந்த படம் தியேட்டர்கள்ல ரிலீஸாக போகுது.
மொத்தத்துல, கல்யாணம்கிறது வாழ்க்கையில கட்டாயமான லட்சியம் இல்ல, ஒருத்தரை ஒருத்தர் மதிக்கிற நபரோட அழகான வாழ்க்கைய அமைச்சிக்கிறதுதான் முக்கியம்னு நித்யா மேனன் சொன்ன வார்த்தைகள் எல்லாரையும் யோசிக்க வைக்குது. காதலோ, கல்யாணமோ அங்க சுதந்திரத்துக்கும், மரியாதைக்கும் தான் ஃபர்ஸ்ட் பிரிஃபரன்ஸ் இருக்கணும்ங்குறதுதான் அவங்க பேச்சோட சுருக்கம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.











