varisu : படப்பிடிப்பு தளத்தில் அழகிய குழந்தையுடன் விஜய்; யாருடைய வாரிசு தெரியுமா?
தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் குழந்தையை மடியில் அமர வைத்தபடி விஜய் இருக்கும் புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகராக இருப்பவர் தளபதி விஜய். இவரின் சமீபத்திய படமான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் நல்ல வசூலையே கண்டிருந்தது.
டாக்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார்.
தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளியுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் ராஸ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த வருகின்றனர்.
சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் என தொடர்ந்து இதன் படப்பிடிப்புகள் நடைபெற்றது. இருந்து கட்டத்தை நெருங்கியுள்ள இதன் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
varisu
இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் குழந்தையை மடியில் அமர வைத்தபடி விஜய் இருக்கும் புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.