MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திரையுலகின் ரியல் ஹீரோ! மறைந்த இயக்குநரின் மகளுக்கு உதவிய யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!

திரையுலகின் ரியல் ஹீரோ! மறைந்த இயக்குநரின் மகளுக்கு உதவிய யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!

Yogi Babu Helps Late Director Suresh Suresh Sangaiah Daughter : மறைந்த பிரபல இயக்குனரின் மகளுக்கு உதவி செய்த யோகி பாபு இந்த நல்லுணர்வை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 03 2026, 11:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Yogi Babu Helps Late Director's Daughter
Image Credit : Cinemain Box

Yogi Babu Helps Late Director's Daughter

மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் மகள்களின் கல்விச் செலவிற்கு நடிகர் யோகி பாபு உதவி செய்துள்ளார். சுரேஷ் சங்கையா: ஒரு கிடாயின் கருணை மனு', 'சத்திய சோதனை' படங்களின் மூலம் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை இயல்பும் யதார்த்தமுமாக சொன்னவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. அவர் சிறிது மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.அவர் மறைவிற்கு முன் உருவான 'கெணத்த காணோம்' படம் விரைவில் திரையை தொடவிருக்கிறது.

25
கெணத்த காணோம்
Image Credit : Cinemain Box

கெணத்த காணோம்

திரைப்படம்: ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியிருந்த திரைப்படம் ‘கெணத்த காணோம்’. நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

35
சுரேஷ் உடன் யோகிபாபு நட்பு:
Image Credit : our own

சுரேஷ் உடன் யோகிபாபு நட்பு:

இயக்குநர் சுரேஷ் சங்கையாவை எனக்கு காக்கா முட்டை படத்தில் இருந்தே தெரியும். ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் என்னை நடிக்க வைக்க சுரேஷ் சங்கையா திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது எனக்கு தயக்கமாக இருந்தது. முதன்மை பாத்திரம் இல்லை என்றாலும், வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். தேதிகள் சார்ந்த சிக்கல், மற்ற படங்களில் இருந்ததால் அதுவும் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து தான் சுரேஷ் சங்கையா என்னை ஹீரோவாக வைத்து படமெடுக்க வேண்டும் என்று இந்தப் படத்தை கொடுத்தது. 

45
Actor Yogi Babu Charity News Tamil
Image Credit : Cinemain Box

Actor Yogi Babu Charity News Tamil

இது எனக்கு கிடைத்த பாக்கியமாக பார்க்கிறேன்.நல்ல இயக்குநரை நாம் இழந்துவிட்டோம். ஆனால், அவர் எப்போதும் நம்முடனேயே தான் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு தான் அவர் உயிரிழந்தார். ஏற்கனவே நான் கூறியதை போல், அந்த குழந்தையின் படிப்புக்கு நான் உதவுகிறேன். மேடை ஏறி சாமி இல்லை என்று கூறுவதை விட மலையேறி சாமி கும்பிடுகிறேன். நான் வணங்கும் முருகனை நம்பி இந்தப் படம் வெற்றி பெற வேண்டுகிறேன்” என்றார்.

55
காசோலை கொடுத்த யோகி பாபு:
Image Credit : Cinemain Box

காசோலை கொடுத்த யோகி பாபு:

சுரேஷின் இரண்டு குழந்தைகளுக்கும் கல்வி செலவுக்காக யோகி பாபு காசோலை வழங்கினார். ஆனால் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பணம் எவ்வளவு என்று சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
யோகி பாபு
தமிழ் சினிமா
திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கென் கருணாஸ் இயக்கிய படத்திற்கு தளபதி பட தலைப்பு! விஜய் மீது கொண்ட பாசத்தால் வைத்த அந்த பெயர் - வைரலாகும் தகவல்!
Recommended image2
திருமணத்திற்குப் பிறகு செம பிஸி! ராஷ்மிகா மந்தனா கையில் வரிசையாக 6 மெகா படங்கள் - 'நேஷனல் கிரஷ்' அதிரடி!"
Recommended image3
கார்த்திகை தீபம் பிளண்டர் மிஸ்டேக்! புதையல் பெட்டியில் கல்லை மாற்றியது எப்படி? சந்திரகலா டிராமாவில் இவ்வளவு லாஜிக் மீறலா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved