Asianet News TamilAsianet News Tamil

பொறுக்க முடியாமல் கொந்தளித்த கமல்ஹாசன்...அதிர்ந்து போன அசீம் ...பிக்பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோவில் மிகவும் ஆவேசமாக அசீமிடம் கமலஹாசன் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

First Published Oct 29, 2022, 5:45 PM IST | Last Updated Oct 29, 2022, 5:45 PM IST

பிக் பாஸ் சீசன் 6 மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் கொடுக்கப்பட்ட நானும் பொம்மை நீயும் பொம்மை போட்டியில் பலரும் தங்களது மிருகத்தனமான குணத்தை வெளிக்காட்டினார்கள் என்று கூறலாம். அதில் முக்கியமானவர் அசீம் தான். அவ்வப்போது இவர் தனலட்சுமி உடன் போட்ட சண்டை பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. முன்னதாக நீ எல்லாம் பொண்ணா என திட்டிய அசீம். பின்னர் பலருடனும் சண்டை ஈடுபட்டார். விக்ரம், அமுதவாணன் என அனைவருடனும் மிகவும் மோசமான வார்த்தைகளோடு சண்டையிட்ட இவர்,  இறுதியாக தனலட்சுமியின்  தோள்பட்டையில் கைவைத்து உள்ளே தள்ளிவிட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்கிறார் என விக்ரம் உள்ளிட்டோர் அசீமுடன் சண்டையிட்டனர். ஆனால் அவர்களது பாடி லாங்குவேஜை காட்டி மிகவும் மோசமாக விமர்சனங்களை அள்ளி வீசினார் அசீம். இதனால் இவரின் நடவடிக்கைகளை கமலஹாசன் கண்டிக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று வீட்டில் உள்ள போட்டியாளர்களை சந்தித்தார் கமலஹாசன். 

மேலும் செய்திகளுக்கு...யாராலும் காப்பாத்த முடியாது... டுவிஸ்ட் வைத்து பேசிய கமல் - ரெட் கார்டு உடன் வெளியேறுகிறாரா அசீம்? புரோமோ இதோ

கடந்த வாரத்தில் ஆயிஷாவை  மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டிய அசீமிற்கு கமலஹாசன் வார்னிங் கொடுத்திருந்தார். இந்த வாரம் தனலட்சுமியிடம் இவர் இவ்வாறு மோசமாக நடந்து கொண்டது குறித்து கமலஹாசன் என்ன சொல்ல போகிறார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோவில் மிகவும் ஆவேசமாக அசீமிடம் கமலஹாசன் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Video Top Stories