Asianet News TamilAsianet News Tamil

கத்தி கூச்சல் போட்ட மகேஸ்வரி... கப்சிப்னு ஆன அசீம் - எப்டி இருந்த மனுஷன இப்படி ஆக்கிட்டாங்களே...! வைரல் புரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2 வாரங்களாக சண்டை போட்டு வந்த அசீம், இந்த வாரம் கப்சிப் என்று அமைதியாக இருந்து வருவதை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

First Published Nov 1, 2022, 4:11 PM IST | Last Updated Nov 1, 2022, 4:10 PM IST

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் போட்டியாளர் அசீம் தான். 2-வது வாரத்தில் ஆயிஷாவை அவர் ஒருமையில் பேசியதை கமல் கண்டித்து இருந்தார். போட்டியாளர்களும் ரெட் கார்டு கொடுத்தனர்.

இதையடுத்து மூன்றாவது வாரமும் தனது திமிர் பேச்சை தொடர்ந்து வந்த அசீமுக்கு கடந்த வார இறுதியில் கமல் செம்ம டோஸ் கொடுத்தார். அதிலிருந்தே கப்சிப் என ஆகிப்போன அசீம், அதன்பின் வாயே திறக்காமல் மிகவும் சைலண்டாக இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... ஆயிஷாவுக்கு ஏற்கனவே 2 முறை கல்யாணம் ஆகிடுச்சு... பலபேர ஏமாத்திருக்கா..! முன்னாள் காதலன் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இந்த வார டாஸ்கில் நடுவராக இருக்கும் மகேஸ்வரிக்கு சில அறிவுரைகளை அசீம் வழங்குகிறார். இதனை ஏற்றுக்கொள்ளாத மகேஸ்வரி, அவரிடம் கத்தி பேசுகிறார். ஆனால் அசீம் அமைதியாக இருக்கும்படியான காட்சிகள் இந்த புரமோவில் இடம்பெற்று உள்ளன.

இந்த வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், எப்படி இருந்த மனுஷன இப்படி ஆக்கிட்டீங்களே என அசீமை பார்த்தால் பரிதாபமாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சினிமாவுக்காக பெயரை மாற்ற சொன்ன பிரபலம்... ‘வாய்ப்பில்ல ராஜா’னு சொல்லி கெத்து காட்டிய அஞ்சலி நாயர்

Video Top Stories