சினிமாவுக்காக பெயரை மாற்ற சொன்ன பிரபலம்... ‘வாய்ப்பில்ல ராஜா’னு சொல்லி கெத்து காட்டிய அஞ்சலி நாயர்
தமிழில் நெடுநல்வாடை, டாணாக்காரன், காலங்களில் அவள் வசந்தம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான அஞ்சலி நாயர், சினிமாவுக்காக பெயரை மாற்ற முடியாது என சொல்லிவிட்டாராம்.
கேரளாவை சேர்ந்தவர் அஞ்சலி நாயர். இவர் தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான நெடுநல்வாடை என்கிற படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தினார்.
இதையடுத்து விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக டாணாக்காரன் படத்தில் நடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றது.
டாணாக்காரன் படத்தில் போலீஸாக நடித்திருந்த அஞ்சலி நாயருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இதனால் செம்ம குஷியில் உள்ளார் அஞ்சலி நாயர்.
தற்போது அஞ்சலி நாயர் நடிப்பில் காலங்களில் அவள் வசந்தம் என்கிற திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஆயிஷாவுக்கு ஏற்கனவே 2 முறை கல்யாணம் ஆகிடுச்சு... பலபேர ஏமாத்திருக்கா..! முன்னாள் காதலன் பரபரப்பு குற்றச்சாட்டு
இதுதவிர மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார் அஞ்சலி நாயர், குறிப்பாக விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பெற்றோர் இராணுவத்தில் இருந்ததால் சிறுவயதில் இருந்தே துணிச்சல் மிகுந்த பெண்ணாக வளர்ந்து வந்த நடிகை அஞ்சலி நாயர், சினிமாவுக்காக தனது பெயரை மாற்ற முடியாது என பிரபலத்திடம் வெளிப்படையாக சொல்லிவிட்டாராம்.
தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது பெயரை மாற்றச் சொன்னதாகவும், ஆனால் சினிமாவுக்காக பெற்றோரு வைத்த பெயரை மாற்ற முடியாது என சொல்லி அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக அஞ்சலி நாயர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதலிடம்.. 2022-ல் அசுர வளர்ச்சி கண்ட கன்னட சினிமா - காரணமாக இருந்த 5 படங்கள் ஒரு பார்வை